- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக ஒரு வேலையை கையில் எடுக்கக் கூடாது. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப உறவுகளோடு விட்டுக் கொடுத்து நடந்தால் பிரச்சனைகள் இல்லை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப்போகிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரி பிரச்சனை நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் ப்ரோமோஷன், சம்பள உயர்வு, கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல செயல்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதில் இருந்த சந்தேகங்கள் விலகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் மன நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் இனிமையான அனுபவத்தை கொடுக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. சின்ன சின்ன போட்டி, பொறாமையால் பிரச்சனைகள் வரும். வாக்குவாதத்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் போதும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றபடி இந்த நாள் ஆரோக்கியத்தோடு நல்ல நாளாக தான் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் சரியாகும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். நீண்ட நாள் பேசாத உறவுகளோடு பேசி விடுவீர்கள். பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்துவிடும். சொத்து வழக்குகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூலாகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கக்கூடிய நல்ல நேரம் கைகூடி வரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியங்கள் நடைபெறவிருக்கும் நாளாக இருக்கும்‌. வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். பெரிசாக பாதிப்புகள் இல்லை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுடைய கவலைகளை எல்லாம் மறந்து விடுவீர்கள். வெளியூர் பயணங்களில் மூலம் மன அமைதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து தகராறுகள் சரியாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தை கூட கவனிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. முன்பின் தெரியாத நபரோடு எந்த விஷயத்தையும் மனம் விட்டு பகிர வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். உங்களுடைய முக்கியமான வேலைகளை கூட மறந்துவிட்டு, யோசனையில் மூழ்கி இருப்பீர்கள். கவனத்தோடு இருங்கள். முக்கியமான அலுவலக வேலை வியாபாரம் ஏதாவது இருந்தால், அதில் கவனக் குறைவு வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்வீர்கள். இருந்தாலும் உங்களுடைய இந்த நாள் அழகான நாளாக தான் இருக்கும். குடும்பத்தோடு நீண்ட நேரம் சேர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். இந்த நாள் இறுதியில் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -