- Advertisement -

நாளை 17-6-2025 தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

- Advertisement -

நாளை 17-6-2025-ம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை சஷ்டி திதி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை மதியம் 12:41 மணி வரை தான் சஷ்டி திதி இருக்கிறது. ஆகவே இந்த வழிபாட்டை நீங்கள் செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடிப்பது அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

ஏனென்றால் செவ்வாய்க்கிழமை காலை 6 டு 7 செவ்வாய் ஹோரையும் இருக்கிறது. இந்த அதிசக்தி வாய்ந்த நாளில் முருகப்பெருமானிடம் என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். இது செவ்வாய்க்கிழமை தேய்பிறை சஷ்டி திதி என்பதால் உங்களுடைய கடன் சுமை குறைவதற்காக இன்றைய தினம் பிரார்த்தனையை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

தீராத நோய் நொடிகள் உங்களை விட்டு விலக, தீராத கடன் சுமை விலக, எதிரி தொல்லை விலக, கண்திருஷ்டி விலக, இப்படி உங்களை விட்டு என்ன பிரச்சனைகள் எல்லாம் விலகிச் செல்ல வேண்டுமோ, அதை எல்லாம் உங்களை விட்டு ஒதுக்கி வைக்க இன்றைய நாள் வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். மனதிற்குள் இருக்கும் பொறாமை, அழுக்கு, கெட்ட புத்தி, வன்மம் பழிவாங்குவது, அனைத்து குணங்களை வெளியில் துரத்தி அடிக்கவும் இன்றைய தினம் முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.

கடன் சுமை தீர தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

தீரா கடன் சுமையிலிருந்து வெளிவர நாளைய தினம் முருகப் பெருமானுக்கு எந்த பழத்தை நெய்வேதியமாக வைக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு ரொம்பவும் பிடித்தால் நாவல் பழ சீசன் இது. கட்டாயம் நம் வீட்டு பக்கத்தில் இருக்கும் பழக்கடைகளில் இந்த பழம் கிடைக்கும். இன்று இரவே இந்த நாவல் பழத்தை கொஞ்சம் வாங்கி ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள்.

- Advertisement -

நாளை காலை 6 டு 7 பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, முருகருக்கு இந்த நாவல் பழத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். ஒரு வெற்றிலைக்கு மேலே நாவல் பழம் வைத்து முருகப்பெருமானுக்கு நெய்வேதியம் நாளை தினம் செய்வது சிறப்பு. நாளை வெற்றிலை மீது நாவல் பழத்தை வைத்து, முருகனிடம் வேண்டிக் கொண்டால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல். கூடிய விரைவில் பலிக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு மஞ்சள் துணியில், ஒரு கைப்பிடி கல்லுப்பு, 6 மிளகு வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இந்த கல்லுப்பு முடிச்சை கையில் வைத்துக்கொண்டு, என்னுடைய கடனும் கஷ்டமும் இந்த கல்லுப்பு கரைவது போல கரைந்து போக வேண்டும் முருகா அதற்கு நீயே துணையாக நிற்க வேண்டும் என்று சொல்லி, அந்த கல்லுப்பு முடிச்சை முருகர் பாதத்தில் வைத்துவிட்டு தீப தூப ஆராதனை காண்பித்து உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்துவிட்டு நாவல் பழத்தை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம்.

- Advertisement -

அடுத்து செவ்வாய்க்கிழமை வரை, அந்த கல்லுக்கு பூஜை அறையிலேயே இருக்கட்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய கடன் சுமை தீரும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடுத்த செவ்வாய் கிழமை அன்று, கல்லுப்பையும் மிளகையும் எடுத்து தண்ணீரில் போட்டு உங்கள் கையை கொண்டு கரைத்து விடுங்கள்.

கடன் சுமை எல்லாம் அந்த தண்ணீரில் கல் உப்பு கரைவது போல கரைந்து காணாமல் போய்விடும். மிளகு மட்டும் அந்த தண்ணீரிலேயே இருக்கட்டும். அந்த தண்ணீரை அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இந்த எளிமையான பரிகாரம் உங்கள் வாழ்நாள் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுபட வைக்க ஒரு உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்

இது தவிர செவ்வாய்க்கிழமை காலை 6 டு 7 முருகன் கோவிலுக்கு சென்றும் நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். வீட்டில் மேல் சொன்ன வழிபாட்டை செய்ய முடியாது எனும் பட்சத்தில், கோவிலில் முருகப்பெருமானுக்கு நாவல் பழம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் அதை தானமாக கொடுக்கலாம், என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தயவு செய்து கொள்வோம்.

- Advertisement -