- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்

இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்

- Advertisement -

இந்த மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது, நேற்று ஜூன் 15ஆம் தேதி மதியம் 3:40க்கு துவங்கி விட்டது. இன்று 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியானது இருக்கிறது. இந்த நேரத்தில் வாராஹகயை மனம் உருகி இந்த நாமத்தைச் சொல்லி வழிபாடு செய்தால், உங்கள் வாழ்வில் இருக்கும் பெரிய பெரிய துன்பங்கள் கூட சுலபமாக விலகிவிடும் என்பது நம்பிக்கை. பஞ்சமி திதியில் வாராஹியை கும்பிடுபவர்கள் ஒருபோதும் ஏமாந்தது கிடையாது. நீங்கள் கேட்ட வரத்தை வாராஹி நிச்சயம் கொடுத்து விடுவாள்.

தேய்பிறை பஞ்சமி வழிபாட்டு மந்திரம்

உங்கள் வீட்டில் வராஹியின் திருவுருவப் படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனம் முழுவதும் வாராஹியே நிறுத்தி இரு கைகளை கூப்பி வாராஹியை கும்பிட்டுக் கொண்டே உங்கள் கஷ்டங்களை வாராஹியிடம் முறையிடுங்கள். நிறைய பிரச்சனைகளை வாராஹிதாயிடும் முறையிடலாம். தவறு கிடையாது. உங்கள் அன்னை போல அவர் உங்களுடைய குறைகளை தீர்த்து வைப்பாள். இருந்தாலும் இந்த பஞ்சமி திதியில் ஏதாவது ஒரு பிரச்சனை உங்களை விட்டு விலக வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை வைத்துக் கொள்வது சிறப்பு.

- Advertisement -

குறிப்பாக இப்போது இந்த நாளில் அவசரமாக உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? கடன் சுமை தீர வேண்டுமா, பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டுமா அல்லது வீடு சொத்து சுகம் ஏதாவது வாங்க வேண்டுமா. எதிரி தொல்லை கண் திருஷ்டி தொல்லை விலக வேண்டுமா? ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சனை, ஒவ்வொரு நேரம் காலத்தில் தலைதூக்கி நிற்கும். இந்த நாளில் உங்களுக்கு எது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறதோ, அந்த பிரச்சனைக்கு தீர்வு தர வாராஹியிடம் பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

“ஓம் ஸ்ரீ புயல் நங்கை வாராஹி தாயே நமஹ” என்ற வாராஹி மந்நிரத்தை இன்று மதியம் 2:40 மணிக்கு முன்பாக 27 முறை இந்த மந்திர வார்த்தையை சொல்லி, வாராஹியை வீட்டிற்கு அழைத்து வேண்டிய வரங்களை கேட்டால் நீங்கள் கேட்டவரும் ஒரே நாளில் நடக்கும் அதிசயத்தை பார்க்கலாம். இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்த்து இந்த தேய்பிறை பஞ்சமி திதி இருப்பது அதி சிறப்பு வாய்ந்தது. செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். முருகருக்கு உரிய நாள். ஆகவே இந்த நாளை யாரும் தவற விடாதீங்க.

- Advertisement -

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக அனைவருக்கும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் வாய்ப்பு கிடைக்க அம்மனை வேண்டிக் கொள்வோம். இன்று நீங்கள் வீட்டில் இல்லை, அலுவலகத்தில் இருக்கிறீர்கள், வெளியில் ஏதோ ஒரு வேலையில் இருக்கிறீர்கள் என்றாலும் தவறு கிடையாது. கண்களை மூடி, உங்கள் கண் முன்னே வாராஹித் தாயின் திரு உருவத்தை கொண்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாதம் தங்கம் சேர மந்திர வழிபாடு

இந்த மந்திரத்தை வெறும் 3 முறை சொல்லி உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டாலும் போதும். புயல் வேகத்தில் வாராஹி உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்