- Advertisement -

நாளை 17-9-2025 புரட்டாசி முதல் நாள் வழிபாடு

- Advertisement -

எல்லா வருடமும் தான் புரட்டாசி மாதம் முதல் தேதி பிறக்கிறது. இந்த வருடம் மட்டும் அப்படி என்ன அதி விசேஷம் என்பது உங்களுக்கு தெரியுமா? நாளை பிறக்கவிருக்கும் புரட்டாசி முதல் நாளின் சிறப்பு என்ன? இந்த புரட்டாசி முதல் நாளில் பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்தால் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்? பெருமாளை வீட்டிற்கு எப்படி அழைப்பது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்திரா ஏகாதசி

நாளை செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த நாளில் ஏகாதசி திதி சேர்ந்து இருப்பது தான் அதி சிறப்பு. இந்த ஏகாதேசிக்கு இந்திரா ஏகாதேசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்தால் நாம் செய்த பாவங்கள் தீரும். நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. புரட்டாசி முதல் நாளிலேயே இத்தனை அற்புதம் மிக்க ஏகாதசி திதி வந்திருப்பது மிக மிக அரிது. ஆகவே இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வதை யாரும் தவறவிடக்கூடாது.

- Advertisement -

புரட்டாசி முதல் நாள் வழிபாடு

சரி, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோராலும் இந்த விரதத்தை அவ்வளவு எளிதில் மேற்கொள்ள முடியாது. வேலை பளு குறைவாக இருப்பவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டை விரதம் இருந்து மேற்கொள்ள முடியும்.

வேலைக்கு செல்பவர்கள், வீட்டிலேயே வேலை சுமை அதிகமாக இருப்பவர்களால் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய முடியாது. நான் ஒரு நாள் விரதம் இருந்தால், புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இந்த பலனைப் பெற வேண்டும் என்றால் நாளைய தினம் விரதத்தை எப்படி மேற்கொள்வது.

- Advertisement -

நாளை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நாளைய தினம் முடிந்தால் எதுவும் சாப்பிடாமல் விரதத்தை மேற்கொள்ளுங்கள். வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கிக் கொடுத்து, பெருமாள் துளசி தீர்த்தத்தை மட்டும் வாங்கி பருகி விரதத்தை துவங்குங்கள். நாளைய தினம் நீங்கள் முதன் முதலில் சாப்பிடக்கூடிய தீர்த்தம் பெருமாள் தீர்த்தமாகத்தான் இருக்க வேண்டும்.

பெருமாள் கோவிலிலேயே கோவிந்தா கோவிந்தா ! என்ற நாமத்தை மட்டும் உச்சரிக்க வேண்டும். நாளைய தினம் எத்தனை முறை நீங்கள் கோவிந்தா நாமத்தை உச்சரிக்கிறீர்களோ அத்தனை எளிதில் பெருமாளின் பாதத்தில் உங்களுக்கு சீக்கிரம் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை முறை பெருமாளின் நாமத்தை நீங்கள் உச்சரிக்கிறீர்களோ அத்தனை சீக்கிரம் உங்களுடைய பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

- Advertisement -

வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதம் இருந்து காலை இந்த நாள் வழிபாட்டை துவங்க வேண்டும். மீண்டும் மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் நெய்வேத்தியம் செய்து வைத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை 108 முறை சொல்லி , குடும்பத்தோடு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாத ஏகாதசி வழிபாடு

பெருமாளுக்கு வைத்த நெய்வேதியத்தை சாப்பிட்டு மாலை 6 மணி அளவில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். நாளைய தினம் இந்த ஏகாதசி விரதமும் அடங்கும் புரட்டாசி மாதம் முதல் நாள் விரதமும் அடங்கும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். புரட்டாசி முதல் நாள் பெருமாளிடம் வைத்த வேண்டுதல், இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் நிறைவேறும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by