
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்காண வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று பழைய கெட்ட விஷயங்களை நினைத்து, புதுசாக வரக்கூடிய சந்தோஷத்தை கைநழுவ விடாதீர்கள்.
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும்.
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் விலகும். சொத்து பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். நீண்ட நாள் பகை விலகும்.
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பொருளாதார சூழ்நிலை சீராக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் இன்று நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு என்று சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு விஷயத்தை போராடி தான் ஜெயிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இருப்பினும் மன தைரியத்தை தளர விடக்கூடாது. குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக் கக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நிதானத்தை இழக்க வேண்டாம். மனதிற்கு பிடித்தவர்களிடம் சண்டை வாக்குவாதம் வேண்டாம். பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களை கவனமாக ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். தேவையற்ற மன குழப்பங்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி, மன நிறைவை பெறுவீர்கள். எதிரி தொல்லை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கு உங்களுடைய பெயர், பட்டியலில் முதலிடத்தை பிடிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய அக்கவுண்டுக்கு நிறைய பணம் வரப்போகிறது. இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமை குறையும். சொத்து சேர்க்கையால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். சில பேர் தாய்நாட்டை விட்டு வெளியூர் செல்வதற்கு உண்டான வாய்ப்புகளும் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
மீன ராசிக்காரர்கள் இன்று ஆர்வமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு உதவி செய்வீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான சூழ்நிலை நிலவும். உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை.