- Advertisement -

அமோகமான வாழ்க்கை வாழ 18ஆம் படி கருப்பு வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் தொழில் ரீதியான எதிரிகள் தொல்லை இருக்கிறது, நீண்ட நாட்களாக சொத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பிரியும் சூழ்நிலை உண்டாகி விட்டது அல்லது குடும்பத்தில் இருக்கக்கூடிய மற்ற உறவினர்களால் பிரச்சனைகள் உண்டாகிறது, நிம்மதி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பலரும் பல விதங்களில் தங்களுடைய பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். இப்படி எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதினெட்டாம் படி கருப்பிடம் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

18ஆம் படி கருப்பு வழிபாடு

சாதாரணமாக ஒரு ஊரில் நடுப்பகுதியில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் கோவில்கள் இருக்கும். ஆனால் அந்த ஊர் எல்லையில் காவல் தெய்வம் மட்டுமே வீற்றிருக்கும். இந்த காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஊரைவிட்டு கிளம்பி வேறு வேலைக்கு செல்வார்கள். மறுபடியும் திரும்ப ஊர் எல்லைக்கு வரும்பொழுது என்னுடன் நீ வந்ததற்கு நன்றி என்று நன்றி கூறி மறுபடியும் காவல் தெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு தான் ஊருக்குள் நுழைவார்கள்.

- Advertisement -

அந்த காவல் தெய்வத்தின் அனுமதி இன்றி யாராலும் ஊருக்குள் நுழைய முடியாது என்றும் எந்த வித தீய சக்திகளும் அணுகாது என்றும் பல விதங்களில் நம்முடைய முன்னோர்கள் நம்பினார்கள். அந்த வகையில் அழகர் மலையில் வீற்றிருக்கக் கூடிய 18-ஆம் படி கருப்பு காவல் தெய்வமாக அந்த அழகர் மலைக்கே வீற்றிருக்கிறார். இவர் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தான் தரிசனம் தரக்கூடியவர். பல பக்தர்களுக்கு காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடிய இந்த 18-ம் படி கருப்பை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர வேண்டும், குடும்ப உறவுகள் வலுவடைந்து ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட எந்த வழக்காக இருந்தாலும் அவை அனைத்தும் சாதகமாக முடிய வேண்டும் என்று நினைப்பவர்கள் பதினெட்டாம் படி கருப்பை வழிபட வேண்டும். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டுமே தான் கருப்பு உதவி செய்வார். நியாயம் இல்லாத செயல்களுக்கு அவர் துணை புரிய மாட்டார் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டு 18-ஆம் படி கருப்பை சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் உங்களுடைய உயரத்திற்கு கத்தி அடித்து வைப்பதாக வேண்டுதல் வையுங்கள். நீங்கள் வேண்டுதல் வைத்த ஒரு வாரத்திற்குள்ளேயே அது நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அது நிறைவேறுவதற்குரிய வழிகள் உங்களை தேடி வரும். அந்த பிரச்சினைகள் முழுமையாக பூர்த்தி அடைந்ததும் உங்கள் உயரத்திற்கு கத்தி அடித்து எந்தவித பேரம் பேசாமல் பணத்தைக் கொடுத்து வாங்கி வந்து 18-ஆம் படி கருப்புவின் முன்பாக வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அசைவம் சாப்பிடக்கூடாது அதேபோல் வழிபாடு செய்து முடித்து வந்த பிறகு மூன்று நாட்களுக்கு அசைவம் சாப்பிடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: தீர்க்கவே முடியாத நோயை தீர்க்கும் அனுமன் வழிபாடு

இப்படி நேர்மையான விஷயங்களுக்கு கருப்புவிடம் வேண்டுதல் வைத்து மனதார வழிபாடு செய்தோம் என்றால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -