- Advertisement -

2024 கார்த்திகை தீபம் ஸ்பெஷல் டிப்ஸ்

- Advertisement -

2024 இவ்வாண்டில் கார்த்திகை தீபம் இந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கிறது. வாழ்வில் இருக்கக் கூடிய எல்லா விதமான இருள்களையும் நீக்கி புதுவிதமான வெளிச்சத்தை கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்! தீபத்திருநாளன்று வீடு முழுவதும் தீபம் ஏற்றி மனதார இறைவனை பிரார்த்திக்கும் பொழுது சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அத்தகைய பெருவிழாவாக இருக்கக்கூடிய கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க இந்த தீபம் ஏற்ற மறக்காதீர்கள். இது மகாலட்சுமி அருள் கிடைக்க நல்ல வழியாகும். மேலும் கார்த்திகை தீபம் அன்று பயன்படக் கூடிய சில டிப்ஸ்களையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தீபம் வைக்கும் முறை :

கார்த்திகை தீபம் ஏற்றும் பொழுது எண்ணெய் கீழே சிந்தக் கூடாது. வீடு இருள் இல்லாமல் ஒளி நிறைந்ததாக இருக்க வேண்டும். பூஜை அறை, தலைவாசல், விளக்கு மாடம், துளசி மாடம், கிணறு அல்லது போர்வெல், மொட்டைமாடி, வாசல், சுற்று சுவர் ஆகிய பகுதிகளில் எவ்வளவு வேண்டுமாலும் விளக்கு ஏற்றி வைக்கலாம். பூஜையில் ஒரு தாம்பூலத்தில் உப்பு நிறைத்து அதன் மீது மண் அகல் தீபம் ஏற்றி உப்பு தீபம் வைக்க லக்ஷ்மி அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

விளக்கு வைக்க டிப்ஸ்:

  • புது விளக்கு அல்லது பழைய விளக்கு எதுவாகினும் அதை 5 மணி நேரம் முந்தைய நாட்களில் சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து பின்பு உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் எண்ணெய் அதிகம் உறியாது.
  • தீபம் ஏற்றும் பொழுது அடியில் எண்ணெய் கசியாமல் இருக்க பெயிண்ட் அல்லது பழைய நெயில் பாலிஷ் இருந்தால் அடிப்பாகத்தில் தடவி காய விடுங்கள். மண் அகல் விளக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற உலோகங்களை பயன்படுத்தக் கூடாது. மண்ணிலே தோன்றிய அனைத்து உயிர்களும், மண்ணிலே மடியும் என்பதை ஆதாரமாகக் கொண்டது மண் அகல் விளக்கு.
  • காது குடையும் புதிய பட்ஸ் ஒன்றை பயன்படுத்தி மஞ்சள், குங்குமம் வைத்துப் பாருங்கள், நேர்த்தியாக அழகாக சிந்தாமல் வைக்கலாம். குங்கும பொட்டு வைக்கும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும். மூன்று அல்லது ஐந்து பொட்டுகள் வைக்கலாம்.
  • திரியை நீட்டமாக போடுவதற்கு பதிலாக பந்து போல உருட்டி தயார் செய்து பின் மேற்புறப் பகுதியை திரி போல கூம்பாக திரித்து விடுங்கள். இது இப்படியே கடைகளில் விற்கவும் செய்கின்றனர். பந்து போல திரியை செய்து அதை அகல் விளக்குக்கு நடுவில் வைப்பதால் விளக்கின் முனையில் கருமை படிவதில்லை. இந்தத் திரியானது அதிக எண்ணெயும் குடிக்காது. அகல் விளக்கு முழுவதுமாக எண்ணெய் ஊற்றாதீர்கள், பாதி அளவிற்கு எண்ணெய் ஊற்றினால் போதும், தேவைப்பட்டால் பிறகு ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • விளக்கிற்கு அடியில் காகிதம், அட்டை போன்றவற்றை வைப்பதை விட அரச மர இலைகள் அல்லது ஆலமர இலைகளை வைப்பது நல்லது. இலைகள் வைத்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அரச மர இலையால் விநாயகர் அருளும் கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
6-12-2024 குமார சஷ்டி விரதம்

இந்த தீபத்திருநாளில் குறைந்தபட்சம் 21 விளக்குகள் முதல் 108 விளக்குகள் வரை வீட்டில் வைத்து இறையருளை உங்கள் பக்கம் திருப்பலாம்.

- Advertisement -