கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியை குமார சஷ்டி என்று சொல்லுவார்கள். மத்த சஷ்டி திதியை காட்டிலும் இந்த சஷ்டி திதிக்கு மகத்துவமும், சக்தியும் அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மற்ற மாதங்களில் வரும் சஷ்டி வழிபாட்டை தவறவிட்டவர்கள் கூட, நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி வழிபாட்டை தவற விடாதீர்கள்.
நாளைய தினம் முருகரை வழிபாடு செய்தால், உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நாளைய தினம் எளிமையாக, முருகரை எந்த முறையில் வழிபாடு செய்வது, எந்த பாடலை பாடினால் முருகன் சந்தோஷப்பட்டு உங்கள் குறைதீர்க்க உங்கள் வீடு தேடி நேரில் வருவான் தெரியுமா. வாங்க இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாளை வழிபாட்டை பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.
குமார சஷ்டி விரதம் 2024
நாளைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி விரதத்தை தொடங்கலாம். விரதம் இருப்பது அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்தது. சஷ்டி வழிபாட்டிற்கு மாலை நேரம் உகந்தது. ஆகவே நாளை மாலை அதாவது 6-12-2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் செய்யலாம்.
வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் நாளை வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் தேன் அபிஷேகம் செய்யலாம். அதுவும் இல்லை என்றால், வெறும் பசும்பால், குளிர்ந்த நீர் ஊற்றி வேலுக்கு அபிஷேகம் செய்து உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வேல் இல்லை என்பவர்கள் முருகர் திருவுருவப்படத்திற்கு உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
முருகனுக்கு அருமையான தமிழ் பாடல்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். உங்கள் வாயால் பின் சொல்லக் கூடிய இந்த பாடலை பாடி முருகப்பெருமானிடம் உங்களுடைய குறைகளை எல்லாம் சொல்லுங்கள். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அந்த முருகப்பெருமானின் செவிகளில் நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனைகளும் கேட்டுவிடும். ஏனென்றால் நாளை முருகப்பெருமானுக்கு உகந்த குமார சஷ்டி அல்லவா. முருகன் மனது சந்தோஷத்தில் திளைத்திருக்கும். நாளை படிக்க வேண்டிய முருகனுக்கு பிடித்த தமிழ் பாடல் வரிகள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
முருகன் மந்திரம்
ஓம் நமோ பகவதே சரவணபவாய
சக்தி சண்முகாய ருத்ர குமாராய
கெளரி சுதாய சகல பூத கண சேவிதாய
அசுர குல நாசனாய ஆகர்ஷய ஆகர்ஷய
பந்தய பந்தய மாம் ரக்க்ஷ ரக்க்ஷ
ஓம் சகல ஜ்வர நிவாரணாய
சகல கஷ்ட நிவாரணாய
ஓம் சரவணபவாய ஓம் செளம்
ஸ்ரீம் அனுகிரகம் குரு குரு சுவாஹா !
உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், பிள்ளைகளால் கஷ்டம், கணவரால் கஷ்டம், தொழிலில் பிரச்சனை, இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி அந்த பிரச்சனைகள் சரியாக முருகனது இந்த ஒரு பாடலை பாடி முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தாலே போதும். சகலவிதமான கஷ்டங்களையும், தோஷங்களையும் தீர்த்து வைக்க அந்த முருகப்பெருமான் ஏதாவது ஒரு ரூபத்தில் ஓடி வந்து விடுவார்.
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக இருக்கும் கடவுளால் நேரில் வரமுடியாது. அதனால் ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வந்து உங்களுக்கு உதவியை செய்வார். ஏதோ ஒரு மனித ரூபத்தில் நீங்கள் முருகனை நிச்சயம் தரிசிக்க முடியும். முருகர் பக்தர்களுக்கு இதற்கு பின்னால் மறைந்திருக்கும் சூட்சமம் நிச்சயம் புரியும்.
இதையும் படிக்கலாமே: தம்பதியருக்குள் சண்டை தீர பரிகாரம்
நீங்கள் முருக பக்தர்களாக இருந்தால் நாளை தினம் இந்த வழிபாட்டை மேற்கொள்ள மறக்காதீர்கள். அதே சமயம் முருகர் இந்த ஒரு பாடலை நாளை ஒரு முறையேனும் உங்கள் வாயால் பாடி முருகனை மகிழ்வித்து விடுங்கள். அது போதும். வாழ்க்கையில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.