- Advertisement -

22-02-2025 அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

பல வருடங்களாக முயற்சி செய்தும் ஜெயிக்க முடியாத ஒரு விஷயத்தை, இரண்டே நாளில் ஜெயித்து காட்டினால் வாழ்க்கையில் எத்தனை சந்தோஷம் இருக்கும். அதற்கான ஒரு நாளை கடவுள் நம் கையில் கொடுத்தால், அதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசய நாள்தான் இன்று. 22-02-2025, இந்த நாளில் மொத்தமாக ஐந்து இரண்டுகள் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறது.

இந்த அதிசக்தி வாய்ந்த நாளில், அதிசக்தி வாய்ந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் இரண்டு முறை சொன்னாலே போதும். அது இரண்டே நாளில் நடப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கிறது. 2222 இப்படி வரக்கூடிய எண்களை ஏஞ்சல் நம்பர் என்று சொல்லுவார்கள். இன்று இது போல தான் ஐந்து இரண்டு, என்ற எண்கள் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறது.

- Advertisement -

இன்றைய தினம் மதியம் 2:22 மணிக்கு சரியாக உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் நீங்கள் சொல்ல வேண்டும். வேலையில் இருக்கிறீர்கள் உங்களால் பெருசாக எந்த பரிகாரமும் செய்ய முடியாது என்றால், இன்று மதியம் சரியாக 2:22 மணிக்கு கண்களை மூடி ஒரு நிமிடம் உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் இரண்டு முறை சொல்லுங்கள். நீண்ட நாட்களாக நடக்காத ஒரு நல்ல விஷயம் உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்‌. திருமணம் நடக்க வேண்டும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் குழந்தை வரம் வேண்டும் கணவருக்கு கடன் சுமை குறைய வேண்டும் என்று என்ன பிரார்த்தனை வைத்தாலும் சரி அந்த வேண்டுதல் நிச்சயம் 2 நாளில் நடக்கும்.

- Advertisement -

இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் என்னுடைய கோரிக்கையை சொன்னால் அது நிச்சயம் நடந்தே தீரும் என்று எதிர்பார்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம் நீங்கள் கேட்டது இரண்டே நாட்களில் உங்கள் கையை வந்து சேர இந்த பிரபஞ்சத்திடம் நாங்களும் வேண்டுதல் வைக்கின்றோம். இரண்டு நாட்களில் கிடைக்காத விஷயங்கள் என்றால் நிச்சயமாக 22 நாட்களுக்குள் நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.

வீட்டில் இருக்கின்றேன் என்னால் சில பல பரிகாரங்களை செய்ய முடியும் என்றால் இன்று மதியம் இரண்டு 2:22 மணிக்கு ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து, 22 முறை உங்களுடைய கோரிக்கையை அந்த வெள்ளை காகிதத்தில் எழுதி மடித்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு. நீங்கள் வேண்டிக் கொண்ட அந்த நல்ல காரியம் நடந்து விட்டதாக மானசீகமாக கற்பனை செய்து, நல்ல பிரார்த்தனையை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு உங்கள் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்திருக்கிறீர்கள். மகனுக்கு சந்தோஷமாக நல்ல பெண்பார்த்து திருமணம் நடந்து விட்டதாக, மகன் சந்தோஷமாக வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள். இந்த கற்பனை கூடிய விரைவில் நிஜமாக மாறும். இதுதான் பரிகாரத்திற்கு பின்பு இருக்கும் சூட்சமம்.

இதையும் படிக்கலாமே: சிவராத்திரி தீப வழிபாடு

இதுபோல எந்த பிரார்த்தனையாக இருந்தாலும் சரி அந்த நல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டது நீங்கள் மனப்பூர்வமாக சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்து இந்த நேரத்தில் வேண்டுதலை வைத்துப் பாருங்கள். இந்த பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை எல்லாம் வாரி வாரி கொடுக்கும் அத்தனை சக்தி வாய்ந்த நேரம் இது. நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -