- Advertisement -

நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியானது வரவிருக்கின்றது. சனிபகவானுக்கு குருவே, இந்த காலபைரவர் தான். உங்களுக்கு சனி பகவானால் தோஷம் இருந்தால், ஏழரை சனி நடந்தால், அஷ்டமத்து சனி, பாத சனி, இப்படி எந்த சனி பிரச்சனை இருந்தாலும் சரி அந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பவர்கள் நாளைய தினம் கட்டாயமாக காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் உங்கள் பண கஷ்டம் மனக்கஷ்டம் தீர காலத்தால் கொடுக்கப்படும் அத்தனை கஷ்டங்களும் தீர, நாளைய தினம் பைரவரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

அஷ்டமி வழிபாடு என்றாலே அதற்கு உகந்த நேரம் ராகுகால நேரம் தான். நாளைய தினம் 29-06-2024 சனிக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. முடியாது என்பவர்கள் மாலை 5:30 மணிக்கு மேல் பைரவர் கோவிலுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது.

ரொம்ப தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்கள் நாளை சிரமம் பார்க்காமல் ராகு கால நேரத்தில் பைரவருக்கு விளக்கு ஏற்றி, செவ்வரளி பூ வாங்கி போட்டு வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும். பூசணி தீபம், மிளகு தீபம், இப்படி பரிகார விளக்குகளாகவும் ஏற்றலாம். வெறும் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் உச்சி தீபம் ஏற்றியும் காலபைரவரை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

காலபைரவரை பார்க்க செல்லும் போது வெறும் கையோடு செல்லாதீங்க. செவ்வரளி பூ, வாங்கி செல்லலாம். இரண்டு செவ்வாழை வாங்கி செல்லலாம், அல்லது சந்தனம் புனுகு போன்ற வாசனை நிறைந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். ஏதாவது ஒரு பொருளை வாங்கி சென்றாலும் போதுமானது தான். பின் சொல்லக் கூடிய மந்திரத்தை கோவிலில் அமர்ந்தும் சொல்லலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே காலபைரவரை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். நாளைய தினம் கால பைரவரை நினைத்து ‘ஓம் பம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 8 முறை சொல்லுங்கள். அந்த பைரவரின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள்.

- Advertisement -

அதில் வரும் தடைகளை எல்லாம் தகர்க்கக் கூடிய வேலையை கால பைரவர் பார்த்துக் கொள்வார். பிறகு வாழ்க்கையில் நீங்கள் எல்லோரும் அனாந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து விடுவீர்கள். கோவிலுக்குப் போக முடியவில்லை வீட்டில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் சரி.

இதையும் படிக்கலாமே: ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி

நாளைய தினம் இந்த மந்திரத்தை மட்டும் மனதார 8 முறை சொல்லிவிட்டு ‘காலபைரவரே காலத்தால் வரக்கூடிய கஷ்டத்திலிருந்து என்னை காப்பாற்று’ என்று சொல்லி உங்களுடைய வேண்டுதலை மனப்பூர்வமாக அந்த ஆண்டவனின் பாதத்தில் இறக்கி வைத்தாலும் நிச்சயம் அது நடக்கும். அனைவருக்கும் கால பைரவரின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -