- Advertisement -

நாளை கார்த்திகை மாதம் 2வது வார சோமவார விரதம்

- Advertisement -

நாளைய தினம், கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக் கூடிய இரண்டாவது சோமவாரம். கார்த்திகை மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை. சிவபெருமான் வழிபாட்டிற்கு இந்த நாள் மிக மிக உகந்தது. உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் சரி, நாளைய தினம் அந்த ஒரு வேண்டுதலை மனதில் நினைத்து இந்த ஒரு மாலையை மட்டும் கட்டி சிவபெருமான் கழுத்தில் போட்டு விட்டால், அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வாழ்க்கையில் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த மாலையை சிவபெருமான் கழுத்தில் போட்டுப் பாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் வீழ்ச்சி என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.

- Advertisement -

25-11-2024 கார்த்திகை மாதம் 2வது வார சோமவார விரதம்

சிவனுக்கு உகந்த வில்வ இலைகள் வாங்கிக் கொள்ளுங்கள். 21 வில்வ இலைகளை கிள்ளி தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் மஞ்சள் போட்டு, பன்னீர் ஊற்றி அதை கொஞ்சம் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மஞ்சள் தொட்டு வில்வ இலையில் ‘நமசிவாய’ மந்திரத்தை எழுத வேண்டும். ஊதுவத்தி குச்சி, தீ பெட்டி குச்சி, இப்படி எதிலாவது தொட்டு எழுதிய பிறகு ஈரத்தில் அந்த மஞ்சள் கொஞ்சம் களைந்தாலும் எந்த தவறும் கிடையாது.

நீங்கள் எழுதுவது உங்களுக்கும் உங்களுடைய மனதிற்கும் தெரிந்தால் மட்டும் போதும். அந்த எழுத்து அடுத்தவர்கள் கண்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்ச நேரம் அந்த மஞ்சள் காய்ந்த பிறகு, அந்த வில்வ இலைகளை எல்லாம் ஒரு மஞ்சள் நிற நூலில் வைத்து மாலையாக கட்ட வேண்டும்.

- Advertisement -

அந்த இலைகளை சுருட்டி மாலையாக கட்டினாலும் சரி, அல்லது அதனுடைய காம்புகளை நூலில் தொடுத்து மாலையாக கட்டினாலும் சரி, அது உங்களுடைய சவுகரியம். இந்த மாலையை கட்டும் போது உங்கள் மனதில் வேண்டுதல் வெக்க வேண்டும். அந்த மாலையை கொண்டு போய் சிவபெருமான் கழுத்தில் போடும் போதும் வேண்டுதலை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேண்டுதல்தான் இருக்க வேண்டும். தாய்மார்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

தந்தை இந்த பரிகாரத்தை செய்யலாம். தன்னுடைய குழந்தை நன்றாக படிக்க வேண்டும், குழந்தைக்கு இருக்கக்கூடிய நோய் நொடி தீர வேண்டும் என்று வேண்டி இந்த வேண்டுதலை செய்து பாருங்கள். நிச்சயம் அந்த வேண்டுதல் பலிக்கும். உங்களுக்கே பணப் பிரச்சனை இருக்கு, உங்களுக்கே திருமணமாக வேண்டும், உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், நீங்கள் இதை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் பிரம்ம முகூர்த்த விளக்கு

ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து மாலையை கட்டுங்கள். நாளைய தினம் கார்த்திகை மாத சோமவார தினத்தில் இந்த வில்வ இலை மாலையை கொண்டு போய் சிவபெருமான் கழுத்தில் போடுங்கள் அல்லது குருக்கள் கையில் கொடுத்து விடுங்கள். அவ்வளவுதான். நாளை வரக்கூடிய சோமவார நாளில் இந்த வழிபாட்டை தவறவிட்டவர்கள், அடுத்தடுத்து வரக்கூடிய கார்த்திகை மாத சோமவார நாளில் கூட இந்த மாலையை சிவபெருமானுக்கு கட்டிப் போடலாம். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -