- Advertisement -
- Advertisement -

இன்றைய நாள் எத்தனை சக்திகள் ஒன்றாக சேர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று பிரபஞ்ச வசிய நாள். 365 என்ற எண்களைக் கொண்டு தேதி வந்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பூரம் நட்சத்திரமும் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை முருகருக்கு சொந்தமான நாள். பூரம் நட்சத்திரம் சுக்கிர பகவானுக்கு சொந்தமான நட்சத்திரம். இதோடு மட்டுமா? இன்று வளர்பிறை அஷ்டமி திதியும் இருக்கிறது.

இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட இந்த 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட இந்த 1 மணி நேரத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் வாழ்வில் இருக்கும் பணக்கஷ்டங்கள் தீரும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். இன்று அந்த 1 மணி நேரம் எப்போது வருகிறது. அந்த நேரத்தில் இறைவனை எந்த முறையில் வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த சில தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம்

இன்று செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சுக்கிர பகவானுக்கு இரவு நேரம் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும். ஆகவே, இன்று 3-6-2025 இரவு 8 டு 9:00 மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் பிரபஞ்சத்திடம் எவ்வளவு பணம் கேட்டாலும் அது உங்களுக்கு கிடைக்கும்.

ஜாதக கட்டத்தில் எவ்வளவு பெரிய பணக்கஷ்டம் வர வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் அதை சரி செய்ய இந்த ஒரு மணி நேர வழிபாடு உங்களுக்கு வழிவகுக்கும். அதற்காக தகுதிக்கு மீறி ஆசைப்படலாமா? உங்களுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது. எவ்வளவு கடன் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் தீருவதற்கு பிரார்த்தனை செய்யலாம். பணம் தவிர வேறு ஏதாவது பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றாலும் இந்த ஒரு மணி நேரத்தில் பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைக்கலாம்.

- Advertisement -

இன்று இரவு குறிப்பிட்ட இந்த ஒரு மணி நேரத்தில் குலதெய்வத்தை வேண்டி, முருகப்பெருமானை வேண்டி, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒரு சின்ன கிண்ணத்தில் 3 துளசி இலை, 2 நெல்லிக்காய், இரண்டையும் ஒரே கிண்ணத்தில் ஒன்றாக போட்டு பூஜையறையில் வைத்து மனம் உருகப் பிரார்த்தனை செய்யுங்கள். பிரபஞ்சத்திடம் என்ன நல்லது வேண்டும் என்றாலும் நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்ட நல்லதை இன்றைய தினம் இந்த பிரபஞ்சம் வாரி வாரி கொடுக்கும்.

தூய்மையான மனதோடு, நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இறுதியாக வழிபாட்டை முடித்துவிட்டு வேண்டுதலை நிறைவு செய்துவிட்டு அந்த நெல்லிக்காய்களை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடவும். (இது ஒரு மணி நேரத்தில் நெல்லிக்காயை பூஜை அறையில் வைத்து வேண்டி, பிரார்த்தனை செய்ய எவ்வளவு பெரிய பணக்கஷ்டமும் தீரும் மறந்துராதீங்க).

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக செவ்வாய்க்கிழமை பரிகாரம்.

அடுத்தவர்களை ஏமாற்றாமல், அடுத்தவர்கள் மீது பொறாமைப்பட்டு எந்த வேலையும் செய்யாதீங்க. அதன் மூலம் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. இந்த ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -