- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தன்னுடைய குடும்பத்தை, தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு 3 தந்திர குறிப்புகள்!

நம்முடைய குடும்பத்தில் இன்று அதிகப்படியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்க ஒரு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? முதலில் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் வராது. இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இருந்தாலும் ஏனோ, இன்று எல்லோர் மனதிலும் ‘ஈகோ’ ஆணிவேராக பதிந்துவிட்டது. விட்டுக் கொடுப்பதற்கு மனம் வரவில்லை. என்ன தான் செய்வது?

சரி. எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய அம்மாக்கள் அவர்களுடைய மாமியார் இடத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? அந்த காலத்தில் இருந்த மாமியார்கள், அவர்களுடைய புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொண்டார்கள்! இவைகளை எல்லாம் வைத்து ஆராய்ந்து மூன்று குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளை பின்பற்றும் குடும்பத்தலைவிகள் கட்டாயம் அவரவர் குடும்பத்தை, அவரவர் வசம் வைத்துக் கொள்ளலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இந்த காலத்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களே! இந்த பதிவை முழுமையாக படிப்பதற்கு முன்பு ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு இந்த 3 விஷயங்களை பெண்கள் கடைபிடிப்பது மிக மிக மிக கஷ்டம்தான். ஆயிரம் மடங்கு கஷ்டமான விஷயம். எல்லா வகையான கோபதாபங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, இதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டோமேயானால், வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்து விடலாம். எல்லாருக்கும் இது தெரிந்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவைகளை எல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகம் மட்டும் தான். அது என்ன, அந்த மூன்று தந்திர சூட்சமம்? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

முதலில், கணவர் சம்பாதித்து வந்த, அந்த குறிப்பிட்ட தொகையை மனைவி கையில் தான் கொடுக்க வேண்டும். இதுதான் நம்முடைய பாரம்பரிய பழக்கமும் கூட. அந்த காலத்திலெல்லாம் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது பெண்கள் கையில்தான் இருந்தது. இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் இடத்தில் சம்பளத்தை கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும், உங்கள் கையில், உங்களுடைய கணவர் அவருடைய சம்பளத்தை கொண்டு வந்து கொடுக்கும் போது, அந்த சம்பளம்  குடும்பத் தேவைகளுக்கு குறைவாக இருந்தாலும், அதை சந்தோஷமாக பெற்றுக் கொள்ள வேண்டும். ‘இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? இது பத்தாது! இந்த மாதம் எவ்வளவு செலவு காத்திருக்கிறது! இந்த மாதம் இந்த செலவு உள்ளது! அந்த செலவு உள்ளது!’ இப்படி கேள்வியை நீங்கள் எழுப்பினால், உங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவ்வளவுதான்! இந்த பேச்சுக்கு இடமே இருக்கக் கூடாது.

- Advertisement -

உங்கள் கையில் வந்த வருமானத்தில் உங்களது குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்தமுடியும் என்ற பட்ஜெட்டை போட்டு விட்டு, அதிலிருந்து எவ்வளவு மிச்சம் பிடித்து எடுத்து வைக்கலாம் என்பதை தான் நீங்கள் யோசிக்க வேண்டும். இந்த ஒரு நம்பிக்கையை, நீங்கள் உங்கள் கணவருக்கு கொடுத்தால் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையில் பொருளாதார பிரச்சனை என்ற ஒன்று வரவே வராது. பிரச்சனையில் பாதி முடிந்ததா?.

இரண்டாவதாக, சாஸ்திர சம்பிரதாயங்கள் என்றாலே அது பெண்களுக்குத் தானா! காலையில் எந்திரிக்க வேண்டும் என்றாலும்  பெண்தான் எந்திரிக்க வேண்டும். இரவில் தூங்க செல்லும் போது நாங்கள்தான் கடைசியில் தூங்கச் செல்ல வேண்டும். கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே! ஆண்களுக்கு இல்லையா? என்ற இந்த விதண்டாவாத கேள்வியை எந்த ஒரு பெண்ணும் வீட்டில் கேட்கக்கூடாது, என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மனதில் எண்ணமே வரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும், பொறுப்புகளும் அவர்களை அடக்குவதற்காகவோ, அவர்களை இழிவு படுத்துவதற்காகவோ கிடையாது. அவர்களுடைய பொறுப்புகளை அதிகப்படுத்துவதற்காக மட்டும்தான்! என்பதை முதலில் நாம் மனதில் விதைக்க வேண்டும். பெண்கள் தலையில் சுமக்கும் பொறுப்புகள் ஏராளம் இருக்குது! பொறுப்புகளை சுமக்க கூடிய தகுதி பெண்களுக்கு உண்டு. அவ்வளவுதான். இது நம் தலைக்கு கிரீடம் மாதிரி!

- Advertisement -

மூன்றாவதாக நாம் வாழப்போகும் கணவர் வீட்டு உறவுகளை மதிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் புகுந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையும், பிறந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையையும் கொடுக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் ஒரு பெண் தன் கணவரது உறவுகளை ஆதரித்தால், சுலபமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகுமா? என்று நீங்கள் மனதுக்குள் கேட்கும் கேள்வி, எனக்கு காதில் விழுகிறது. பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் இதுதான். இதை அறிந்து செயல்படுபவர்கள், வாழ்க்கையில் ஜெயித்து உள்ளார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு உருவாக்கப்பட்ட அநீதி என்று தலைகனத்தோடு செயல்பட்டவர்கள் உடைய வாழ்க்கை, கேள்விக்குறியாகி இருப்பதை நீங்கள் கூட பார்த்திருக்கலாம். பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களை தன்னுடைய வீட்டில் செயல்படுத்தினால் போதும். உங்கள் வாழ்க்கை சொர்க்கம் ஆகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal eppadi irukka vendum in Tamil. Pengal kadaipidikka vendiya seyalgal. Pengal seiya vendiyavai Tamil. Pengal seiyya vendiya seyalgal. Pengal kadamaigal in Tamil.

- Advertisement -