- Advertisement -
- Advertisement -

நம்முடைய பணத்தை வெளி ஆட்களுக்கு கடனாக கொடுத்திருப்போம். ஆனால் நீண்ட நாள் ஆகியும் அந்த கடனை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். நம்முடைய நகையை, நம்முடைய தேவைக்காக அடமானம் வைத்திருப்போம். ஆனால் அந்த நகையை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.

இதுபோல நம்முடைய பணம் நகை சொத்து, ஏதாவது வெளியிடங்களில் சிக்கியிருந்தால், அந்த பணம் நகை சொத்து எந்த ஒரு தடையும் இல்லாமல் மீண்டும் நம் கைக்கே வர, நாளைய தினம் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது. இந்த பிரச்சனையில் இருந்து நாம் வெளிவர தேவையான சக்தியை பெற, நாளைய தினம் விநாயகரை எந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வளர்பிறை சதுர்த்தி விநாயகர் வழிபாடு

நாளை 30-5-2025 வளர்பிறை சதுர்த்தி திதி, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது அதி சிறப்பு. மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை கும்பிட்டால், வீட்டிற்குள் மகாலட்சுமி வருவதற்கு உண்டான தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

நாளைய தினம் வீட்டில் வெற்றிலையின் மேலே ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வையுங்கள். வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை அறை பூக்கள் போட்டு அலங்காரத்தோடு தான் இருக்கும். பிரச்சனை கிடையாது. பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையார் தலையில் ஒரு அருகம்புல் சொருகி விடுங்கள்.

- Advertisement -

உங்கள் உள்ளங்கைகளில் ஒரு ரூபாய் நாணயம், அதன் மேலே ஒரு அருகம் புல்லை வைத்து, கைகளை மூடி கொள்ளுங்கள். “ஓம் சக்தி கணபதியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி, உங்களுடைய பிரார்த்தனையை விநாயகப் பெருமானிடம் வையுங்கள். அதாவது உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ன இருக்கிறது.

உங்கள் வீட்டிற்குள் எந்த மகாலட்சுமி வருகை தர வேண்டும். கடன் வசூலாக வேண்டுமா, அடமானத்தில் வைத்த நகை மீட்க வேண்டுமா, அடமானத்தில் இருக்கும் சொத்து பத்திரங்கள் வீட்டுக்குள் வர வேண்டுமா, என்ன வரவு உங்களுக்கு தேவையோ, அதை விநாயகப் பெருமானிடம் கேளுங்கள். பிறகு உள்ளங்கைகளில் இருக்கும் அந்த ஒரு ரூபாயையும், அருகம்புள்ளையும், மஞ்சள் பிள்ளையார் பக்கத்தில் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

விநாயகருக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் கட்டாயமாக வைக்க வேண்டும். இரண்டு வாழைப்பழங்கள், வைத்தால் கூட போதும். இந்த பூஜையை முடித்துவிட்டு அந்த ஒரு ரூபாயையும், அருகம்புள்ளையையும் எடுத்து, பீரோவில் வைத்து விடுங்கள். நிச்சயமாக மகாலட்சுமி உங்கள் பீரோவிற்குள் வந்து, குடி கொள்வாள்.

இதையும் படிக்கலாமே: கிரக தோஷம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ

வரவேண்டிய வரவு வந்தே தீரும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. எளிமையான இந்த வழிபாட்டை நாளை தினம் வீட்டில் இருந்தபடியே செய்யுங்கள். நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by