- Advertisement -
- Advertisement -

வருடத்தில் வெறும் 8 நாட்கள் மட்டுமே இந்த வாஸ்து பகவான் கண் விழித்திருப்பார். அதுவும் அந்த 8 நாளில், குறிப்பிட்ட ஒன்றரை மணி இந்நேரத்தில் மட்டும்தான் வாஸ்து பகவான் கண்விழிப்பார். இந்த நாளை தான் வாஸ்து நாள் என்று சொல்லுவார்கள். அவர் கண் விழித்திருக்கும் நேரத்தை தான் வாஸ்து நேரம் என்று சொல்லுவார்கள். இந்த வாஸ்து நேரத்தில் பூமி பூஜை போடுவது, புது வீடு கட்ட துவங்குவது, இதுபோல விஷயங்களை துவங்கினால் நல்லது.

நாம் கட்டக்கூடிய வீடு கோவிலாக நல்லபடியாக கட்டப்படும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தின் வாஸ்து நாள் ஆனது நாளைய தினம் வரவிருக்கிறது. 4.6.2025 புதன்கிழமை நாளில் நவமி திதியோடு இந்த வாஸ்து நாள் வந்திருப்பது அதிசிறப்பு. இந்த நாளில் நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க, வீட்டில் இருக்கும் தரித்திரம் விலக, வீட்டில் இருக்கும் வாஸ்து கோளாறால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்படாமல் இருக்க, சொந்த வீடு கட்டும் ஆசை நிறைவேற, செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.

- Advertisement -

சொல்ல வேண்டிய மந்திரம் என்ன. இந்த மந்திரத்தை எந்த நேரத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும் என்பதை பற்றிய, ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாஸ்து நாள் பரிகாரம்

நாளை 4.6.2025 புதன்கிழமை காலை 9:58 மணி முதல் 10:34 மணி வரை இடைப்பட்ட இந்த நேரத்தில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வாஸ்து பகவானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரம் தான் நாளைய வாஸ்து நேரம். எங்களுடைய வீட்டில் வாஸ்து தோஷத்தால் பிரச்சனை வரக்கூடாது. வாஸ்து தோஷத்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் கெட்டுப் போகக்கூடாது.

- Advertisement -

நோய் நொடி வரக்கூடாது. கடன் சுமை இருக்கக் கூடாது என்று, வாஸ்து பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு “ஓம் வாஸ்து புருஷாய நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இந்த குறிப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டு வடக்கிழக்கு மூலையில் ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை வைத்து, அதில் மஞ்சள் தூள், கல் உப்பு, பச்சை கற்பூரம் போட்டு அந்த சொம்பிற்கு மேலே உங்கள் வலது கையை வைத்து மீண்டும் வாஸ்து பகவானின் மந்திரத்தை 27 முறை சொல்லவேண்டும். “ஓம் வாஸ்து புருஷாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி அந்த தீர்த்தத்தை எடுத்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் நீங்கும் பணக்கஷ்டம் நீங்கும்.

- Advertisement -

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வாஸ்து பகவானிடம் இந்த நேரத்தில் பிரார்த்தனை வைக்கலாம். வீட்டின் வடகிழக்கு மூலையில் தான் வாஸ்து பகவானின் தலைப்பகுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தான் ஈசானிய மூளை என்றும் சொல்லுவார்கள்.

வாஸ்து நாளில் வீட்டில் செய்ய வேண்டிய மிக மிக எளிமையான பரிகாரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மேலே சொல்லப்பட்டுள்ள அந்த 1/2 மணி நேரத்திற்குள் மேலே சொன்ன அத்தனை வழிபாட்டையும் செய்து முடித்து விடுங்கள். இதை படிக்கும்போது பெரிய அளவில் வேலை போல தோன்றும். ஆனால் அதெல்லாம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: இன்று 3-6-2025 பிரபஞ்ச வசிய நாள்

10 நிமிடத்தில் இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, உங்களுடைய அன்றாட வேலையை துவங்கலாம். எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு அனைவர் வீட்டிலும் நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -