
பொதுவாகவே வீட்டில் ஒரே ஒரு பெண் இருந்தால் சுவாமிக்கு நிவேதனம் வைப்பதற்கு பலகாரங்கள் செய்வதில் சிரமங்கள் இருக்கும். முந்தைய நாளிலிருந்து முறுக்கு சீடை அதிரசம் இப்படி எல்லாம் கிருஷ்ண ஜெயந்திக்கு பலகாரம் செய்ய தொடங்கி விடுவார்கள். உங்களுடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள் வரை எந்த நெய்வேத்தியமும் செய்து வைக்கவில்லையா. கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான், கிருஷ்ணருக்கு முறுக்கு சுட வேண்டும் என்று தோணுச்சா. உடனே இந்த முறுக்கு சுட்டு, கிருஷ்ணருக்கு நிவேதமா வச்சுருங்க. ஈஸியா ஐந்தே நிமிடத்தில் மாவு பிசையலாம். பத்தே நிமிடத்தில் முறுக்கு சுட்டு எடுக்கலாம். சுவையான பட்டர் பெப்பர் முறுக்கு சுடுவது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.
ஒரு ஆகலமான பாத்திரத்தை எடுத்துக்கோங்க. அதில் பச்சரிசி மாவு 400 கிராம், கடலை மாவு 200 கிராம், தேவையான அளவு உப்பு, ஓமம் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், உருக்கிய ஆறிய வெண்ணெய் 50 கிராம், ஊற்றி இந்த பொருட்களை எல்லாம் முதலில் நன்றாக பிசைந்து விடுங்கள்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். எப்போதுமே கடையிலிருந்து வாங்கிய அரிசி மாவாக இருந்தால், அதை கடாயில் போட்டு ஒருமுறை வறுத்து விட்டு அதன் பிறகு முறுக்கு செய்தால் மொறு மொறுப்பாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கொஞ்சம் நோட் பண்ணி வச்சிக்கோங்க.
சரி, இப்போது தயாராக இருக்கும் இந்த மாவில் முறுக்கு சுட்டு எடுக்க வேண்டும். ஸ்டார் அச்சு இருக்கும் அல்லவா. முள்ளு முறுக்கு என்று சொல்வார்களே, அந்த அச்சை போட்டு, இந்த முறுக்கு மாவை முறுக்கு குழலில் போட்டு, நேரடியாக இந்த முறுக்கை கண்ணா பின்னான்னு எண்ணெயில் பிழிஞ்சு விடுங்க. சூடாக இருக்கும் எண்ணெயில் பிழிந்து விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு முறுக்கு ஜாக்கிரதையாக பிழிந்து விடுங்கள். (உங்களுக்கு அனுபவம் இல்லை என்றால் கரண்டியில் முறுக்கு பிழிந்து கூட பிறகு எடுத்து எண்ணெய் சட்டியில் விடலாம்.)
முறுக்கு ஓரளவுக்கு சிவந்து வந்தவுடன் முறுக்கை கரண்டியாலேயே உடைத்து விடுங்கள். சின்ன சின்ன முறுக்கு துண்டுகள் கிடைக்கும். எண்ணெயில் இந்த முறுக்கு நன்றாக வெந்து சிடசிடப்பு எல்லாம் அடங்கி வரும் அப்போது, முறுக்கை எண்ணெய்யில் இருந்து வெளியே எடுத்து விடுங்கள். சூப்பரான மொறுமொறுப்பான முறுக்கு ரெடி. (உங்களுக்கு முறுக்கு வட்ட வடிவில் அழகாக தேவை என்றால் அப்படியும் சுட்டு எடுக்கலாம். இப்படி காராசேவு போல தேவை என்றாலும் உடைத்து சுட்டு எடுக்கலாம் அது நம்முடைய விருப்பம் தான்.) எதுவா இருந்தாலும் டேஸ்ட் ஒன்னு தான்.
இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே தேன்குழல் முறுக்கு சுடுவது இவ்வளவு ஈஸியா? கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ரெசிபி மட்டும் தெரிந்தால் போதும் வீட்டிலேயே மொறு மொறு முறுக்கு சுட்டு அசத்தலாம்.
பெப்பர் வாசத்தோடு இந்த முறுக்கு நல்லா இருக்கும். கிருஷ்ண ஜெயந்திக்கு இதே போல பெப்பர் வாசத்தோட, பட்டர் முறுக்கு உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துறீங்க. இன்ஸ்டன்ட் முறுக்கை கிருஷ்ணரும் சாப்பிட்டு சந்தோஷப்படுவார். ட்ரை பண்ணி பாருங்க.