வீட்டிலேயே தேன்குழல் முறுக்கு சுடுவது இவ்வளவு ஈஸியா? கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ரெசிபி மட்டும் தெரிந்தால் போதும் வீட்டிலேயே மொறு மொறு முறுக்கு சுட்டு அசத்தலாம்.

murukku
- Advertisement -

இன்னும் ஒரு சில நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி வரவிருக்கிறது அல்லவா. இதற்கு வீட்டிலேயே சில பேர் முறுக்கு சுடுவாங்க. ஒரே மாதிரி முறுக்கு சுடுவதை மாற்றி தேன்குழல் முறுக்கை வித்தியாசமாக தேங்காய் பால் ஊற்றி செய்யலாமே. இந்த முறுக்கு கடைகளில் கிடைப்பது போல ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். முறுக்கு பார்ப்பதற்கு வெள்ளையாக வரும். அதேசமயம் மொறுமொறுப்பாகவும் இருக்கும். அழகான தேங்காய் பால் சேர்த்த தேன்குழல் முறுக்கு. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை 

முதலில் 1/2 மூடி தேங்காயை எடுத்து துருவிக்கோங்க. தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். தேங்காய் பால் ரொம்பவும் திக்காக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிட தேங்காய் பால் எடுப்போம் அல்லவா. அதேபோல இரண்டு முறை தேங்காயில் தண்ணீர் ஊற்றி அரைத்து புழிந்து தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து 1/2 கப் அளவு உளுந்தை எடுத்து ஒரு கடாயில் போட்டு வறுக்க வேண்டும். ரொம்பவும் சிவக்கும் படி வறுக்க வேண்டாம். ஓரளவுக்கு உளுந்து சிவந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து, இந்த உளுந்தை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான பேஷன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த உளுந்து மாவு 1 டம்ளர் என்றால், பச்சரிசி மாவு 4 டம்ளர் சேர்க்கவும். இதோடு எள்ளு 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு சூடான எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றி இந்த மாவை நன்றாக கலந்து விடுங்கள். பிறகு தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் இருக்குது அல்லவா, அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவோடு சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

- Advertisement -

மாவு ரொம்பவும் கட்டியாக பிசைந்து இருந்தால், முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழியும்போது முறுக்கில் விரிசல் வரும். அந்த விரிசல் வராத அளவுக்கு சாஃப்டா முறுக்கு மாவு பிசைய வேண்டும். அதற்காக ரொம்பவும் இளகிய பக்குவத்தில் முறுக்கு மாவை பிசைந்தால் எண்ணெய் அதிகமாக குடிக்கும். முறுக்கு மாவு பதம் பிசையும் போது சரியான பக்குவத்தில் பிசைஞ்சுக்கோங்க.

வழக்கம் போல இந்த முறுக்கு மாவை சின்ன சின்ன பாகங்களாக பிரித்து விட்டு, தேன்குழல் அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து சுட்டு எடுத்தால் சூப்பரான தேன் குழல் முறுக்கு தயார். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு சுலபமான இந்த முறுக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: இட்லி, பூரி, சப்பாத்திக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் சூப்பரான இந்த கடலைப்பருப்பு குருமா செஞ்சு பாருங்க. டேஸ்ட் சும்மா வேற லெவல்ல இருக்கும்.

பின்குறிப்பு: இந்த முறுக்கு செய்ய எந்த பச்சரிசி மாவை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் அரைத்த முறுக்கு மாவு, பச்சரிசி மாவு, கடையில் வாங்கிய பச்சரிசி மாவு, அல்லது இடியாப்பம் கொழுக்கட்டை மாவில் கூட இந்த முறுக்கு சுட்டால் சூப்பராக தான் வரும். மாவை முறுக்கு சுடுவதற்கு முன்பாக கடாயில் போட்டு லேசாக வறுத்து விட்டு அதன் பின்பு முறுக்கு மாவு பிசைய்யுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -