- Advertisement -

சிவபெருமானின் அருள் பெற பிரதோஷம் மந்திரம்

- Advertisement -

இன்று புதன்கிழமை. இந்த நாள் பிரதோஷத்தோடு சேர்ந்து வந்திருப்பதால், சாதாரண புதன்கிழமையானது அதிசக்தி வாய்ந்த புதன்கிழமையாக மாறிவிட்டது. இன்றைய தினம் அனைவரும் கட்டாயம் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று புதன்கிழமை, புதன் கிரகத்திற்குரிய தெய்வம் பெருமாள். ஆக பெருமாளுடைய ஆசீர்வாதத்தையும் நமக்கு பெற்று தரக்கூடிய ஒரு நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

இந்த நாளில் நம்முடைய கடன் பிரச்சனை தீர, சிவபெருமானின் பாதத்தில் சின்னதாக ஒரு இடம் கிடைக்க, நாம் செய்ய வேண்டிய எளிமையான இரண்டு பரிகாரங்களை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலாவது பரிகாரம் கடன் பிரச்சனை தீர. இன்று புதன்கிழமை, புதன் பகவானுக்கு உரிய தானியம் என்றால் அது பச்சைப்பயிறு.

- Advertisement -

அதை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதோடு வெல்லம் சேர்த்து கலந்து இன்று மாலை பிரதோஷ நேரத்தில் பசு மாட்டிற்கு உங்கள் கையால் தானம் கொடுக்கும் பட்சத்தில், உங்களுடைய கடன் சுமையானது குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில சிவ ஆலயங்களிலேயே கோசாலை இருக்கும். அந்த பசுவிற்கு இந்த பச்சை பயிரை கொடுப்பது மிக மிக சிறப்பு. அப்படி முடிய வில்லை என்றால் வீட்டு பக்கத்தில் யாராவது பசு வைத்திருப்பார்கள். அவர்களிடம் கொண்டு போய் இந்த பச்சை பயிரை கொடுத்து பசுவை சாப்பிட வைத்து விடுங்கள். இது முதல் பரிகாரம்.

பிரதோஷ நேரத்தில் எல்லோராலும் தேவாரம் திருவாசகம் திருமுறைகளை எல்லாம் முறையாக படிக்க முடியாது. அதற்கான நேரமும் நமக்கு கிடையாது. ஏனென்றால் பிரதோஷம் நேரமான மாலை நேரத்தில் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை எல்லோரும் அலுவலகத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலை, அல்லது அவரவர் வேலையை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். ஆக இந்த நேரத்தில் அந்த ஈசனின் பரிபூரண அருளை பெற வேண்டும் என்றால் நாம் சொல்ல வேண்டிய எளிமையான மந்திரம் ஒன்று இருக்கிறது.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

நமசிவாய
மசிவாயந
சிவாயநம
வாயநமசி
யநமசிவா

இந்த ஐந்து வரி மந்திரத்தை படித்தாலே போதும். சிவபெருமானின் பாதத்தில் உங்களுக்கு முத்தி கிடைத்துவிடும். இன்று மாலை முடிந்தால் சிவன் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் அமர்ந்து கண்களை மூடி இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். எண்ணிக்கை கணக்கு கிடையாது. எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்லலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்பவர்கள் வீட்டில் இருந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற உதவும் மந்திரம்

வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்கள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து மாலை பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை ஒரு முறை படித்தாலே போதும். அந்த ஈசனை தரிசனம் செய்த புண்ணியம், நமக்கு கிடைத்துவிடும். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -