
மாலவன் என்றால் பெருமாள். வேலவன் என்றால் முருகர். இவர்கள் இருவருக்கும் நாளைய தினத்தில் வழிபாடு செய்தால் நம்மிடம் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் அப்படி என்ன சிறப்பு வாய்ந்த நாள். நாளைக்கு என்ன விசேஷம்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டால், ஆன்மிகம் சார்ந்த இந்த பதிவினை முழுசாக படிச்சி தெரிஞ்சுக்கோங்க.
பெருமாளின் மருமகன், முருகப்பெருமான். நாளைய தினம் இவர்கள் இருவரையும் ஒருசேர வணங்க ஒரு நல்ல வாய்ப்பு. 6ஆம் தேதி 6ஆம் மாதம் முருகனுக்கு உரியது. வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று முதலில் 6 நல்லெண்ணெய் விளக்கோ அல்லது நெய் விளக்கோ ஏற்றி வைத்துவிட்டு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் ஒரு முறை படிக்க வேண்டும்.
கோவிலிலேயே அமர்ந்து நாளைய தினம் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் விலகும். நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சித்திரை நட்சத்திரம், முருகப்பெருமானை வழிபட மிக மிக உகந்த நட்சத்திரம். இந்த நாளில் முருகப்பெருமானின் வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும். வறுமை நீங்கும். செல்வ கடாட்சம் உயரும் என்பது நம்பிக்கை.
ஆகவே நாளைய தினம் முடிந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வீட்டிலேயே கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம் அல்லது கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விடலாம்.
நாளைய தினம் பெருமாளுக்கும் உகந்த நாள் ஆயிற்றே, நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து ஏகாதசி திதியும் பிறக்கிறது. நாளை மாலை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு கைப்பிடி அவலில் கொஞ்சம் பொட்டு கடலை வெல்லம் சேர்த்து கலந்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு, பெருமாளையும் தாயாரையும் மனமுருகி வழிபாடு செய்து, அந்த பிரசாதத்தை வாங்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானமாக கொடுத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பணத்தின் மீது இருக்கும் திருஷ்டி விலக பரிகாரம்
வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் ஏகாதசி திதியில், அவல் தானம் செய்தால், உங்களுக்கு கோடான கோடி பணம் கிடைக்கும். கோடான கோடி வருமானம் வரும். குசேலர் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் கொடுத்த கதை நாம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா. கிருஷ்ண பரமாத்மாவும், பெருமாளின் அவதாரம் தானே. மாலவனும் வேலவனும் சேர்ந்து, உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார்கள். எனவே நாளைய தினம் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரங்கள் உங்களுக்கு நல்ல பலன் தரும். இந்த தகவல் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.