- Advertisement -

ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 5 மங்களப் பொருட்கள்

- Advertisement -

ஆடி பதினெட்டு, இந்த நாளை ஆடிப்பெருக்கு என்று சொல்லுவார்கள். பெருக்கு என்பது அதிகமாக பெருக்குதல் என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. அதாவது இந்த நாளில் நாம் ஆரம்பிக்கக் கூடிய செயல், பல மடங்காக பெருகும். இந்த நாளில் என்னென்ன விஷயங்களை துவங்கலாம், என்னென்ன பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வ செழிப்பு உயரும், எந்த தவறுகளை செய்யவே கூடாது என்பதை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆடி பதினெட்டில் செய்ய வேண்டியது

இந்த ஆடி பதினெட்டில் எந்த ஒரு புது விஷயத்தை நீங்கள் தொடங்கினாலும் அது செழிப்பாக வளர்ந்து நிற்கும். உதாரணத்திற்கு புது தொழில் ஆரம்பிப்பது, புதிதாக கடை வைப்பது, புதியதாக வங்கி கணக்கு தொடங்குவது, புதியதாக சீட்டு போடுவது, இப்படி உங்களுக்கு என்ன நல்ல விஷயங்கள் எல்லாம் நிறைய லாபத்தை கொடுக்குமோ, இந்த விஷயங்கள் எல்லாம் நிறைய பெருகிக்கொண்டே செல்ல வேண்டுமோ, அந்த விஷயங்களை இந்த நாளில் தொடங்குவது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

இந்த நாளில் கல் உப்பு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, மல்லிகைப்பூ, இதுபோல உங்களுக்கு தேவைப்படக்கூடிய மங்களப் பொருட்களை வாங்குவது வீட்டில் பல மடங்கு செல்வத்தை பெருக்கிக் கொடுக்கும் என்பதை நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இது தவிர வசதி இருப்பவர்கள் தங்கம், வெள்ளி, புது ஆடை, போன்ற பொருட்களையும் வாங்கலாம். ஆனால் இவை அனைத்தும் கட்டாயம் கிடையாது. விலை உயர்ந்த பொருட்களை, பணத்தைக் கடன் வாங்கி வாங்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

தங்கம் வெள்ளி வைரம் வாங்கினால் தான் ஆடிப்பெருக்கு நமக்கு நன்மையை தரும் என்றும் சொல்லவில்லை. வாய்ப்பு இருப்பவர்கள், ஆடிக் கழித்து திருமணம் வைத்திருக்கிறீர்கள், தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம் இருக்கிறது, வெள்ளி வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பவர்கள் இந்த நாளில் அந்த தங்கத்தையும் வெள்ளியையும் வாங்குவது பெருகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

திருமணத்திற்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி, திருமண சீர்வரிசை பொருட்களையும் இந்த ஆடி 18 அன்று தாராளமாக வாங்கலாம் ரொம்ப ரொம்ப நல்லது. இது தவிர உங்கள் வசதிக்கு ஏற்ப 20 ரூபாய் கொடுத்து கல் உப்பு, மஞ்சள் குங்குமம் வாங்கினாலே வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

அதேபோல ஆடிப்பெருக்கு அன்று மூன்று சுமங்கலி பெண்களுக்காகவது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, மஞ்சள் கயிறு வைத்து தானம் கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அது உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் சுபகாரிய தடையை நீக்கும். தீர்க்க சுமங்கலி வரத்தையும் கொடுக்கும். எந்த நல்ல நாளாக இருந்தாலும் அந்த நல்ல நாளில் நாம் தானம் கொடுப்பதன் மூலமாகத்தான் முழு பலனையும் அடைய முடியும்.

- Advertisement -

இயலாதவர்களுக்கு, முதியவர்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு யாரேனும் ஒருவருக்காவது உங்கள் கையால் நாளைய தினம் அன்னதானம் செய்யுங்கள். நாளை நீங்கள் செய்யக்கூடிய தானம் பல மடங்காக பெருகும். உங்களால் முடிந்த உணவு பண்டங்களை வாங்கி கொடுங்கள். நாளைய தினம் அன்னதானம் செய்யுங்கள்.

ஆடிப்பெருக்கில் என்ன செய்யக்கூடாது

ஆடிப்பெருக்கு அன்று அசைவம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். முடி வெட்டுவது, நகம் வெட்டுவது, ஆண்கள் ஷேவிங் செய்வது போன்ற காரியங்களை தவிர்த்துக் கொள்ளவும். மூன்றாவதாக விஷயம், யாரிடமும் ஆடிப்பெருக்கன்று கைநீட்டி கடன் வாங்கவே கூடாது. இரவலாக கூட ஒரு பொருளை பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து, சொந்தக்காரிடமிருந்து வாங்காதீங்க.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடு

கூடுமானவரை மருத்துவமனைக்கு செல்லக்கூடிய விஷயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். ரொம்பவும் அவசரம் ஆக இருந்தால் மருத்துவரிடம் சென்று தான் ஆக வேண்டும் தவறு கிடையாது. முடியும் என்ற பட்சத்தில் தவிர்த்துக் கொள்ளவும். இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய எந்த தவறாக இருந்தாலும் அது பல மடங்கு பெருகிவிடும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -