நாளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் பூச நட்சத்திரம் பிறக்கவிருகின்றது. பூச நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்து இணையக்கூடிய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளோடு ஆடிப்பெருக்கு சேர்ந்திருக்கும் சமயத்தில் நாம் எந்த ஒரு செயல்பாட்டை தொடங்கினாலும், அது நமக்கு பல மடங்கு லாபத்தை கொடுத்து விடும்.
இந்த நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் பல மடங்கு பலனை கொடுக்கும். இவ்வளவு அற்புதமான இந்த நாளை நாம் தவற விடலாமா. நாளைய தினம் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் என்ன வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஆடிப்பெருக்கன்று செய்ய வேண்டிய குபேர வழிபாடு
3-8-2024 சனிக்கிழமை ஆடி 18, நாளைய தினம் மாலை 6 மணிக்கு மேலாக இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் குபேரது திருவுருவப்படம் அல்லது குபேர பொம்மை, சிலை எது இருந்தாலும் சரி, அதை வழிபாட்டிற்கு பயன்படுத்துங்கள். சில பேர் வீட்டில் குபேர நாணயம், குபேர விளக்கு கூட வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் இருந்தால் நாளைய தினம் முறையாக உங்களுடைய வீட்டில் குபேர பூஜை செய்யலாம். அதாவது குபேரர் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குபேரருக்கு பாசிப்பயிரால் செய்த இனிப்பு நெய்வேதியம் வைக்க வேண்டும்.
அந்த பாசிப்பயிரில் வெல்லம் நெய் இவைகளை சேர்த்து இனிப்பு பலகாரத்தை தயார் செய்து கொள்ளவும். இதை நெய்வேதியமாக குபேரருக்கு வைத்துவிட்டு, ஒரு சில்வர் பாத்திரம் அல்லது பித்தளை பாத்திரம், வெண்கல பாத்திரம் எது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு குபேர நாணயங்களாக சத்தம் எழுப்பும் படி போட்டு 108 முறை ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய வீட்டில் செல்வம் வளம் பல மடங்கு பெருகும்.
கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வீட்டில் தங்கமும் வைரமும் வைடூரியமும் சேர தொடங்கிவிடும். ஆமாங்க அதை எல்லாம் வாங்குவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை உங்களுக்கு அந்த கடவுள் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பார். கவலையே படாதீங்க.
எங்களுடைய வீட்டில் குபேரர் படம், சிலை குபேர நாணயம், குபேர விளக்கு எதுவுமே இல்லை என்ன செய்வது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சில்வர் பாத்திரத்தில், 108 ஒரு ரூபாய் நாணயங்களை போட்டு சத்தம் எழுப்பி குபேர மந்திரத்தை சொல்லி மேல் சொன்ன முறையில் அர்ச்சனை செய்தாலும், உங்களுக்கு நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளுக்கு நம் பூஜை அறையில் இருக்கும் பொருட்கள் முக்கியம் இல்லை. மனதில் இருக்கும் நம்பிக்கை தான் முக்கியம். நாளைக்கு ஆடிப்பெருக்கு நீங்கள் எதை செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பதை மறக்காதீங்க. இந்த வழிபாடு பலன் பல மடங்காக பெருகி, பல மடங்கு பலனை உங்களுக்கு கொடுத்து, பல மடங்கு வருமானத்தை அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆடிப்பெருக்கு அன்று வழிபாடு செய்யும் முறை
நம்பிக்கையோடு வழிபாட்டை மேற்கொள்பவர்கள் ஏமாற்றப்பட்டதே கிடையாது. நாளை செல்வம் பெருக வேண்டும் என்று மனநிறைவோடு நீங்கள் ஒரு பிரார்த்தனை வைத்தாலே போதும். அந்த பிரார்த்தனை உங்களுக்கு பல மடங்கு நன்மையை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.