- Advertisement -
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ பலவிதமான பாவங்களை செய்திருப்போம். இந்த பாவங்களின் விழைவால் தான் நமக்கு கஷ்டங்கள் என்பது ஏற்படுகிறது. ஒரு ஜென்மத்தில் நாம் செய்த பாவம் என்பது மறு ஜென்மத்திற்கும் தொடரும் என்றும் இப்படி ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் சேர்த்து வைத்த பாவங்கள் அனைத்தையும் சேர்த்து தான் அடுத்த ஜென்மத்தில் கர்ம வினைகளாக நாம் அனுபவிக்கிறோம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தான் நாம் ஏழு ஜென்ம பாவம் என்று கூறுகிறோம். இந்த பாவங்கள் அனைத்தையும் நீக்கினால்தான் நாம் செய்யக்கூடிய செயல்களில் நமக்கு வெற்றிகள் உண்டாகும். அப்படிப்பட்ட பாவங்களை நீக்குவதற்கு மிகவும் எளிமையான முறையில் நம்முடைய முன்னோர்கள் வகுத்த வழி தான் புனித நீராடுதல்.

புனிதமான நதிகளாக கருதப்படக் கூடிய கங்கா காவேரி போன்ற நதிகளில் நாம் நீராடுவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் நாம் நீராடுவோம் பொழுது அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரக்கூடிய 18-ஆம் தேதி அதாவது ஆடிப்பெருக்கு நாள் அன்று காவேரியில் நாம் நீராடுவதன் மூலம் நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீரும். புண்ணியங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அனைவராலும் காவேரி ஆற்றில் நீராட முடியாது அல்லவா? அப்படி நீராட முடியாதவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆடிப்பெருக்கு புனித நீராடுதல்

இந்த பரிகாரத்தை காலை 4 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதாவது இந்த புண்ணிய நீராடுதலை மதியம் 12 மணிக்குள் நாம் செய்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நேரத்தில் நாம் குளிக்க செல்கிறோமோ அதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். கிழக்கு திசை பார்த்து அமர்ந்து கொண்டு கையில் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வலது கையில் வைத்துக்கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 5 நிமிடம் கூற வேண்டும்.

இப்படி கூறுவதன் மூலம் டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீர் ஆனது புனித தீர்த்தமாக மாறும். பிறகு அந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீருடன் கலந்து குளிப்பதன் மூலம் புனித ஆறுகளில் நீராடிய பலனை பெற முடியும். நாம் செய்த அனைத்து பாவங்களும் தீரும். தலைக்கு தான் குளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தலையில் மூன்று முறை இந்த தண்ணீரை தெளித்தால் கூட போதும். வயதானவர்கள் முகம் கை கால்களை கூட இந்த தண்ணீரை வைத்து கழுவிக்கொள்ளலாம்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்திதம் குரும்”

இதையும் படிக்கலாமே: ஆடிப்பெருக்கு வீட்டில் வழிபாடு செய்யும் முறை

முழு மனதோடு இந்த ஒரு மந்திரத்தை கூறி நீராடுவதன் மூலம் அனைத்து விதமான புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை பெற முடியும். அதன் மூலம் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -