- Advertisement -

ஆடி பௌர்ணமி கிரிவலம் வரும் சூட்சமம் வரும் சூட்சமம்

- Advertisement -

பௌர்ணமி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வரக்கூடிய ஒரு கோவில் என்றால் அது திருவண்ணாமலை தான். அதுவும் திருவண்ணாமலையில் செய்யக்கூடிய கிரிவலம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகவே திகழ்கிறது. இன்றைய காலத்தில் பல நாடுகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல பேர் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்வதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற இந்த பௌர்ணமி கிரிவலத்தை எந்த முறையில் நாம் செய்தால் நம்முடைய பிரச்சனைகள் தீரும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.

ஆடி பௌர்ணமி கிரிவலம்

பௌர்ணமி தினத்தில் அம்மனை எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு சிவபெருமானையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் மலை ரூபத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்தால் அதன் பலன் அதிகமாகவே இருக்கும். சிவபெருமானை மட்டுமல்லாமல் எந்த ஒரு மலையை தெய்வமாக பாவித்து நாம் வழிபாடு செய்கிறோமோ அந்த மலையை பௌர்ணமி இரவு வெளிச்சத்தில் வலம் வந்தால் பல அற்புதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு காரணம் அந்த மலைகளில் சித்தர்களும் முனிவர்களும் தியானம் செய்து இருப்பார்கள், அவர்களின் சக்தி அங்கு நிறைந்திருக்கும், அந்த சக்தி நமக்கு கிடைக்கும் பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்பதுதான். இதேபோல்தான் திருவண்ணாமலையில் செய்யக்கூடிய கிரிவலமும். அக்னி ரூபமாக சிவபெருமான் திகழக்கூடிய இந்த திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது. தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் யார் ஒருவர் கிரிவலம் சென்று வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய பிரச்சினைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.

அப்படி பிரச்சினைகள் முழுமையாக தீர வேண்டும் என்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பௌர்ணமி இரவு தான் கிரிவலம் செய்ய வேண்டும். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் மேலாடை அணியாமல் வெறும் உடம்போடு கிரிவலம் வருவது என்பது மிகவும் சிறப்பு. இதோடு மட்டுமல்லாமல் கிரிவலம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது டைமண்ட் கற்கண்டை கையில் வைத்துக்கொண்டு சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய செடிகளில் தூவிக்கொண்டு செல்வதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய எறும்புகள் அந்த கற்கண்டை எடுத்து சாப்பிடும்.

- Advertisement -

இதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும். கர்ம வினைகள் தீர்ந்தால் பிரச்சினைகளும் குறையும். நன்மைகள் உண்டாகும். கற்கண்டுக்கு பதிலாக பச்சரிசியை கூட நாம் தூங்கிக் கொண்டு செல்லலாம். மேலும் அந்த மலையை சுற்றி இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு விபூதி வாங்கி தருவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

இதே போல் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டு இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதற்கு முன்பாக வீட்டில் இருந்து சிறிது மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு கிரிவலம் சென்று வந்து திரும்பவும் அந்த மஞ்சள் தூளை வீட்டில் இருக்கக் கூடிய மஞ்சள் தூளுடன் சேர்த்து வைப்பதன் மூலம் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பல சித்தர்களும் பல முனிவர்களும் தியானம் செய்து சிவமயமாக இருக்கக்கூடிய இந்த திருவண்ணாமலையை முழு மனதோடு சிவபெருமானாக கருதி வலம் வரும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் முற்றிலும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டமும் பண வரவும் ஏற்பட பரிகாரம்

இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றி நாமும் கிரிவலம் சென்று அதற்குரிய பலனை பெற்று நலமுடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -