- Advertisement -
- Advertisement -

ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரத்தை தான் நாம் திருமஞ்சனம் என்று கூறுகிறோம். நடராஜர் பெருமானுக்கு விசேஷமாக நடக்கக்கூடிய விழாக்களுள் ஒன்றாக திகழ்வதுதான் திருமஞ்சனம். அன்றைய தினம் சிதம்பரம் நடராஜருக்கு மிகவும் விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிதம்பரத்தில் மட்டுமல்ல இருக்கக்கூடிய அனைத்து சிவ ஆலயங்களிலும் இருக்கும் நடராஜருக்கு விசேஷமான அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட நாளில் எந்த முறையில் நாம் சிவபெருமானின் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆனி திருமஞ்சன வழிபாடு

ஜூலை மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திர நாள் அன்று தான் திருமஞ்சனம் என்று கூறுவோம். அப்படி பார்க்கும் பொழுது ஜூலை மாதம் 11ஆம் தேதி மதியம் 1:47கே உத்திர நட்சத்திரம் ஆரம்பித்து விடுகிறது. ஜூலை மாதம் 12ஆம் தேதி 4:20 க்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது. சூரிய உதயத்தின் பொழுது எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நட்சத்திரம் தான் அன்றைய பொழுதில் இருக்கும் என்பதால் அனைத்து சிவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது.

- Advertisement -

இன்றைய தினம் சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமானோடு சேர்த்து முருகப்பெருமானையும் நம்ம வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.

அருகில் ஆலயம் இல்லை என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். அப்படி வீட்டில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் மாலை 4:20 க்கு முன்பாகவே வீட்டில் அபிஷேக ஆராதனைகளை செய்து விட வேண்டும். சுத்தமான தண்ணீர், பால், பன்னீர், சந்தனம் போன்ற அபிஷேகங்களை வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் சிலைக்கு செய்து மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது பெண்கள் கூற வேண்டிய ஒரு மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை முழுமனதோடு பெண்கள் ஒரு முறை கூறினார்கள் என்றால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில், உச்சிப் பொழுதில், மாலை நேரத்தில் என்று மூன்று வேளையும் சொல்லலாம்.

இயலாதவர்கள் ஒரே ஒரு முறையாவது மட்டும் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் போதும்.

- Advertisement -

மந்திரம்

கிருபா சமுத்திர ஸ்ரீமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாம பாகம் சதாசிவம் ருக்ரமனந்த ரூபம் சிதம்பர நேசம் திருத்தி பாவ யாமி

இந்த மந்திரத்தை அமர்ந்து சொல்லும் பொழுது நாம் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த எளிமையான மந்திர உச்சாடலை கூறுவதோடு மட்டுமல்லாமல் நம்மால் இயன்ற அளவு சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து நாளைய தினம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சந்தோஷமான வாழ்க்கை அமையும். திருமணமாகாத பெண்கள் இந்த மந்திரத்தை கூறும்பொழுது விரைவிலேயே திருமணம் கைகூடும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர காவல் தெய்வ வழிபாடு
முழு மனதுடன் இந்த மந்திரத்தை சிவபெருமானின் நினைத்து உச்சரிப்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -