- Advertisement -
இன்றைய செய்திகள்

இந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி

பெரும்பாலான மக்கள் இந்த உலகில் பிறந்து, வளர்ந்து, சாதாரண வாழ்கை வாழ்ந்து பிறகு மரித்து விடுகின்றனர். சில வருடங்களில் அவர்களது நெருங்கிய உறவுகளே அவர்களை மறந்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில மனிதர்கள் மட்டுமே பேதங்கள் கடந்து எல்லா மக்களாலும், எப்போதும் நேசிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் நமது நாட்டின் “பாரத ரத்னா திரு ஏ பி ஜே அப்துல் கலாம்” அவர்கள். அவருக்கு ராமேஸ்வரத்தில் ஒரு கோவிலில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ராமநாதபுரம் மாவட்டம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்தானமாக இருந்த போது, அதை ஆட்சி புரிந்தவர்கள் சேதுபதி மன்னர் பரம்பரையினர் ஆவார்கள். அப்பரம்பரையில் வந்த “கிழவன் சேதுபதி” ஆட்சி காலமே ராமநாதபுரத்தின் பொற்காலம என கூறுகிறார்கள் இப்பகுதியினர். அவரிடம் அமைச்சராக பணியாற்றிய இஸ்லாமியரான “வள்ளல் சீதக்காதியிடம்”, ராமேஸ்வர கோவிலின் சில பகுதிகளை கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார் மன்னர் சேதுபதி. வள்ளல் சீதக்காதியும் அந்த கோவிலின் பகுதிகளை கட்டிமுடித்தார்.

- Advertisement -

அப்போது கட்டடம் கட்ட பயன்பட்ட பல பாறைக்கற்கள் மீதமாகின. இக்கற்களை கொண்டு கீழக்கரையில் இந்துக்கள் வழிபட கோவில் இல்லாததால் அங்கு ஒரு கோவில் கட்டலாமா? என மன்னர் சேதுபதியிடம் கேட்டார் சீதக்காதி. அதற்கு மன்னர் கீழக்கரையில் வழிபட மசூதியில்லாமல் இஸ்லாமியர்கள் சிரமப்படுகின்றனர், எனவே அங்கு இக்கற்களை கொண்டு மசூதி ஒன்றை காட்டுமாறு சேதுபதி மன்னர் சீதக்காதியிடம் கூற, அவரும் அவ்வாறே ஒரு மசூதியை கட்டி முடித்தார்.

அப்படி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இன்றும் ஒற்றுமையுடன் வாழும் ராமேஸ்வரத்தில் பிறந்தவர் தான் ஏவுகணை விஞ்ஞானியும், பாரதத்தின் முன்னாள் குடியரசு தலைவருமான காலஞ்சென்ற முனைவர் ஏ பி ஜே திரு அப்துல் கலாம் அவர்கள். தனது ஆராய்ச்சி திறனாலும், கடின உழைப்பாலும் விஞ்ஞானியாக உருவெடுத்த அப்துல் கலாம் இந்தியாவின் புகழை உலகளவில் பறைசாற்றியவர். பிற்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தாலும் தனது நேர்மை மற்றும் எளிமையான குணங்களாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

- Advertisement -

விஞ்ஞானியாக இருந்தாலும் ஆன்மீகத்திலும், மெய்ஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் அப்துல் கலாம். தான் ஜனாதிபதியாக இருந்த போது எல்லா மத வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்று வந்தவர். “பகவத் கீதையை என் மனம் தளர்வாக இருக்கும் போதெல்லாம் படிப்பேன்” என கூறியவர் கலாம். இந்து மத மடாதிபதிகளை சந்திக்கும்போதெல்லாம் தனக்கு வேதங்கள் மற்றும் இதிகாசங்களில் இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுவார்.

திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு ஞானி போல் வாழ்ந்து தனது வாழ்வை இந்த நாட்டின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்த திரு அப்துல் கலாம் அவர்களை ஒரு சிலர் கடவுளின் மனித வடிவமாக பாவிக்கின்றனர். அப்படி அவரை உயர்வாக மதித்த சிலர், அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு சிறிய கோவிலின் கோபுரத்தில் அவரின் உருவத்தை இடம்பெற செய்து விட்டனர். இதை திரு அப்துல் கலாம் அவர்கள் மீது பலர் வைத்திருக்கும் மரியாதைக்கு உதாரணமாக நாம் பார்க்கலாம்.

அப்துல் காலம் பொன்மொழிகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Dr. APJ Abdul Kalam statue was carved in a temple in Rameswaram and that photo is trending all over India.

- Advertisement -
Published by