
நாளை அக்டோபர் 2ஆம் தேதி வியாழக்கிழமை, குருவாரம் விஜயதசமி. இதுபோக இந்த நாளில் பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரமும் இருக்கிறது. இதே நாளில் தான் அதிசக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திர நேரமும் வரவிருக்கிறது. சக்தி வாய்ந்த இந்த நாளில், சக்தி வாய்ந்த இந்த 24 நிமிடத்தில் நாம் என்ன வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வைத்தாலும், அது அப்படியே பலிக்கும்.
உங்களுடைய வாழ்நாள் துன்பங்கள் நீங்கும். கஷ்டங்களில் இருந்து விடுபட நாளைய தினம் அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன, அதிசக்தி வாய்ந்த இந்த அபிஜித் நட்சத்திர நேரம் நாளைய தினம் எப்போது வருகிறது ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
2-10-2025 வியாழக்கிழமை காலை 9:01 டு 9:25 மணி வரை, இந்த 24 நிமிடங்கள் அபிஜித் நட்சத்திரம் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் கிருஷ்ண பரமாத்மாவை வேண்டி பூஜை அறையில் 2 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உடனே உங்களுக்கு கிடைக்கும்.
நாளை விஜயதசமி. விஜய என்றாலே வெற்றியைக் குறிக்கக் கூடியது. வெற்றியை குறிக்கக்கூடிய நாளில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய முயற்சிகள் வேண்டுதல் நிச்சயம் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும் இது முதல் விஷயம்.
உங்களுக்கு பண தேவை அதிகமாக இருக்கிறது. கடன் சுமை அதிகமாக இருக்கிறது. அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு எளிய ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இது. இதை விஜயதசமி அன்று நீங்கள் செய்ய பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், கெட்டதை உங்களிடம் நெருங்க விடாமல் தடுக்கும் தர்பை புல், இந்த இரண்டு பொருள் தேவை. ஒரு சின்ன மண் அகல் விளக்கில் சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து அதை ஏற்றி விடுங்கள். பச்சை கற்பூர நெருப்பில் இந்த தர்ப்பை புல்லை காட்டி, பொசுக்கி விட வேண்டும். ஒரு சாம்பல் கிடைக்கும்.
அந்த சாம்பலை, அந்த கற்பூரத்திலேயே சேகரித்துக் கொள்ளுங்கள். எரியும் கற்பூரத்தில் இந்த தர்ப்பை புல்லை போட்டு சாம்பலாக்கி அதில் கொஞ்சம் நெய் விட்டு கலந்து, இந்த மையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் இந்த மையை தயாரித்து, பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வையுங்கள். இந்த மையை தயார் செய்யும் போது “ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்” என்ற மந்திரத்தைச் சொல்லுங்கள்.
அந்த மைக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய அபரிவிதமான சக்தி வந்து சேர்ந்துவிடும். பிறகு அந்த மையை கொஞ்சமாக எடுத்து உச்சந்தலையில் தடவிக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். (இந்த மையை தயார் செய்யவில்லை என்றாலும், அபிஜித் நட்சத்திர நேரம் வரும்போது 24 நிமிடத்தில் இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் கூட பண வசியம் உண்டாகும்).
இதேபோல தினம் தினம் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை சொல்லி அந்த மையை உச்சந்தலையில் தடவிக் கொண்டால், உங்களுக்கான பண வசியம் அதிகரிக்கும். ஆனால் இந்த மைக்கு 48 நாள் மட்டும்தான் பவர் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி பூஜையை பூர்த்தி செய்யும் முறை
அதற்கு மேலே நீங்கள் பயன்படுத்தக் கூடாது. மீண்டும் அபிஜித் நட்சத்திர நேரம் வரும்போது இதே போல மையை தயார் செய்து பயன்படுத்த தொடங்குங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பலனளிக்கும் பட்சத்தில் பலவிதமான பிரச்சனைகளிலிருந்து வெளிவர, இந்த சின்ன மை உதவியாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.