
சில சமயங்களில் அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு நாம் வேலையை கவனித்துக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அடுப்பில் இருக்கும் பொருள் வற்றி போய் பாத்திரத்தில் அடி பிடிக்க ஆரம்பித்து விடும். அடிபிடித்த வாசனை வரவே, நாம் ஓடிப் போய் சமையலறைக்கு சென்று அடுப்பை அணைப்போம். இது போன்ற சமயத்தில் விடாப்பிடியான இந்த அடிப்பிடித்த கறையை எப்படி போக்குவது? என்பது தொல்லை பிடித்த வேலையாக மாறிவிடும். இதை கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல், கை வைக்காமல், எப்படி சரி செய்வது? என்கிற வீட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
குறிப்பாக பால் பாத்திரம் அடி பிடித்தால் அதை சுத்தம் செய்வது ரொம்ப கடினமாக இருக்கும். நீங்கள் என்னதான் இரும்பு நார் கொண்டு தேய் தேய் என்று தேய்த்தாலும் அது கொஞ்சம் கூட நீங்காது, உடும்பு பிடியாக பிடித்திருக்கும். மேலும் நார் தான் வீணாகி போகும். அது மட்டும் அல்லாமல் பாத்திரத்தில் கீறல் அதிகமாக விழுந்திருக்கும். இது போல பாத்திரத்தை சேதப்படுத்தாமல் நார் கொண்டு தேய்க்காமல் விடாப்பிடியான பால் கறை அல்லது மற்ற அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.
அடிப்பிடித்த பாத்திரத்தை மேலோட்டமாக நீங்கள் தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உட்புறம் நீங்கள் விடாப்படியான கறையின் மீது இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு விம் லிக்விட் அல்லது பாத்திரம் தேய்க்கும் ஏதாவது ஒரு பிராண்டட் லிக்விட் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய எலுமிச்சை பழத்திலிருந்து அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரத்தை தூக்கி அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். பாத்திரம் கண்டிப்பாக 20 நிமிடம் நன்கு கொதிக்க வேண்டும். 15லிருந்து 20 நிமிடம் குறையாமல் கொதிக்க விட்டால் அடிப்பிடித்த கறை அப்படியே தனியாக உரிந்து வந்து விடும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் இம்மாற்றம் நிகழும். குறிப்பாக பால் அடிப்பிடித்த பாத்திரம் சுலபமாக முழுவதுமாக உரிந்து வருவதை காண முடியும்.
அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக இரும்பு நார் கொண்டு லேசாக தேய்த்தால் போதும், பழைய படி உங்களுடைய பாத்திரம் பளபளன்னு பளிச்சினு மின்ன ஆரம்பிக்கும். அடிப்பிடித்த பாத்திரத்தை கழுவுவதற்கு நிறையவே நேரத்தை செலவிட வேண்டி இருக்கும். இந்த சமயத்தில் இந்த ஒரு குறிப்பு ரொம்பவே உபயோகமாக நிச்சயம் இருக்கும். சிலர் இந்த மெத்தெடில் துணி லிக்விட்கள் பயன்படுத்தி பார்ப்பது உண்டு. வேறு லிக்விட்கள் பயன்படுத்தி பார்ப்பதால் பலன் ஒன்றும் இல்லை.
இதையும் படிக்கலாமே:
உங்கள் சமையலை எளிமையாகவும், மிக மிக சுவையாகவும் மாற்ற தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக.
விம் லிக்விட் உடன் இதை எலுமிச்சை சாறு சேரும் பொழுது அடிபிடித்த கறை காணாமல் போகிறது. நீங்கள் சோப்பு, ஷாம்பூ என்று எதை போட்டு தேய்த்தாலும் இந்த கறை அவ்வளவு எளிதாக போகாது, ஆனால் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல், அடிபிடித்த பாத்திரம் கீறல் விழாமல் புதியவை போல மாற்றிவிட முடியும். நீங்களும் இதே மெதர்டில் அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க.