உங்கள் சமையலை எளிமையாகவும், மிக மிக சுவையாகவும் மாற்ற தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக.

sweet
- Advertisement -

தீபாவளி வரப்போகுது. நிறைய பேர் வீட்டில் ரவா லட்டு, குலோப் ஜாமுன் என்று விதவிதமாக இனிப்பு பலகாரங்களை செய்வீர்கள். அந்த இனிப்பு பலகாரம் சுவை கூட்டவும், இன்னும் வீட்டில் செய்யக்கூடிய சமையல் பலகாரங்கள் ருசியை அதிகரிக்கவும், மீதமான சமையல் பொருட்கள் வீணாகாமல் இருக்கவும் ஒரு சில சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்புகளை படித்து பாருங்கள். பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

குறிப்பு 1:
குலோப் ஜாமுன் செய்யும்போது ஜாமுனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்த பின்பு, சர்க்கரை ஜீராவில் சேர்ப்போம் அல்லவா. அப்போது சுடச்சுட பொறித்தெடுத்த ஜாமுனை, ஆரிய சர்க்கரை பாகில் போடும்போது, ஜாமுன் விரிசல் விடாமல் நன்றாக ஊறி குண்டு குண்டாக அழகாக கிடைக்கும். சூடான சர்க்கரை பாகில் பொரித்த ஜாமுனை போடக்கூடாது.

- Advertisement -

குறிப்பு 2:
மூன்று டேபிள் ஸ்பூன் அவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து லேசாக நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளுங்கள். ரவா லட்டு செய்யும் போது, அதில் இந்த பொடித்த அவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் சேர்த்து ரவா லட்டு செய்தால் ரவா லட்டு மிக மிக சுவையாக கிடைக்கும்.

குறிப்பு 3:
ஆப்பத்தை சுட்டு வைத்தால், அது சீக்கிரம் டிரை ஆகிவிடும். ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு போட்டு கலந்து ஆப்பம் சுட்டால் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாமல் சாஃப்டாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
கொத்தமல்லி சட்னி புதினா சட்னி அரைக்கும்போது சுவை கூடுவதற்காக புளி சேர்ப்போம் அல்லவா. புளிக்கு பதில் ஆம்சூர் பவுடர் என்று சொல்லப்படும் மாங்காய் தூள் சேர்த்தால் அதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். தேவைப்பட்டால் உங்கள் வீட்டில் இருந்தால் ஒரு துண்டு மாங்காய் இருந்தால் சேர்த்து கூட சட்னி அரைக்கலாம். (ஆம்ச்சூர் பவுடர், மாங்காய் ஏதாவது ஒன்று தான் சேர்க்க வேண்டும்.)

குறிப்பு 5:
இனி ரவா இட்லி செய்யும் போது, இரண்டு ஸ்பூன் சேமியாவை லேசாக வறுத்து தயிரில் போட்டு ஊறவைத்து, அதை ரவா இட்லி மாவுடன் சேர்த்து கலந்து இட்லி சுட்டு சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

குறிப்பு 6:
கீரையில் துவரம் பருப்பு சேர்க்காமல், பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும். கூடவே சிறிய கப் அளவு காய்ச்சிய பாலை அதில் ஊற்றி சமைக்கும் போது அதனுடைய மனம் இன்னும் சூப்பராக இருக்கும்.

குறிப்பு 7:
வெயில் காலத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு பயன்படும். கோதுமை மாவை சலித்து எடுத்தால் தவுடு கிடைக்கும் அல்லவா. அதை தூக்கி குப்பையில் போடாதீங்க. அதில் தயிறு கலந்து அதை உங்களுடைய உடம்பில் தேய்த்து குளித்தால் சூட்டினால் வரும் எரிச்சல் தணியும். சூட்டு கொப்பளங்கள் வராது. உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். சன் டேன் கூட சூப்பராக ரிமூவ் ஆகும்.

குறிப்பு 8:
சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மனமாக இருக்கும். அதே சமையம் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.

குறிப்பு 9:
உருளைக்கிழங்கு சிப்ஸ் வாழைக்காய் சிப்ஸ் இவைகள் நிச்சயமாக பாக்கெட்டில் கடைசியில் நான்கு நான்கு ஐந்து மீதம் இருக்கும். இதை குப்பையில் போடாதீங்க. ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஓட்டி பொரியல் செய்யும் போது அதன் மேலே தூவி விட்டால் பொரியலின் சுவை கூடும்.

குறிப்பு 10:
பாயசம் செய்யும் போது சில சமயம் அந்த பாயசம் நீர்த்துப்போகும். அது கட்டியாக வேண்டுமா. இரண்டு வாழைப்பழங்களை நன்றாக குழைத்து அதில் போட்டு இரண்டு ஸ்பூன் தேனை கலந்து விடுங்கள் சூப்பரான கட்டியான பாயசம் தயார். சாதாரணமாக செய்த பாயாசத்தின் சுவை விட, இதன் சுவை கூடுதலாக இருக்கும்.

குறிப்பு 11:
உருளைக்கிழங்கு ரோஸ்ட், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இவைகளை செய்யும்போது அதன் மேலே கொஞ்சம் ரொட்டி தூளை தூவி ரோஸ்ட் செய்தால் அது இன்னும் கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

- Advertisement -