- Advertisement -

அகத்தியர் சொன்ன முருகன் மந்திரம்

- Advertisement -

மகா கந்த சஷ்டி விரதமானது இன்றிலிருந்து துவங்கி இருக்கிறது. இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படும். முருகன் திருக்கல்யாணத்தோடு சேர்ந்து ஏழு நாட்கள் கந்த சஷ்டி விரதமாக சொல்லப்படுகிறது. இந்த ஏழு நாட்களும் தொடர்ந்து முருகப் பெருமானை, உடம்பை வருத்தி வேண்டி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது.

அதாவது அவரவர் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுடைய வேலை சுமைக்கு ஏற்ப, உங்களுடைய ஒரு நாள் பொழுதில், ஒரு பத்து நிமிடம் ஆவது முருகனுக்கு ஒதுக்கினால் போதும். இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் எல்லோரும் பணத்தின் பின்னால் ஓடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். எதையும் குறையாக சொல்லவில்லை. இன்றைய சூழ்நிலைக்கு இறை வழிபாட்டை எப்படி செய்ய முடியும் என்று பாருங்கள். அதன்படி உங்களுடைய வழிபாட்டை மாற்றிக் கொண்டால் முருகன் ஒன்றும் தண்டிக்க மாட்டார்.

- Advertisement -

இந்த சஷ்டி நாட்களில் தினம் தோறும், ஒரு நிமிடம் கண்களை மூடி ‘முருகா’ என்று வழிபாடு செய்தாலும் முருகனுடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஏழு நாட்களும் என்னால் முருகனை வழிபட முடியாது என்று சொன்னாலும், இந்த ஏழு நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரே ஒரு நாள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானுக்கு முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த வழிபாட்டை செய்தாலும் கூட போதும்.

கொஞ்சமாக தினை மாவு வாங்கிக் கொள்ளுங்கள். தினை மாவில் கொஞ்சமாக தேன் ஊற்றி வெல்லம் சேர்த்து பிசைந்து அதை மாவிளக்கு போல தயார் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு தாம்பூல தட்டின் மீது வைத்து, கொஞ்சமாக நெய் விட்டு, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளவும். முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த தினை மாவில் மாவிளக்கு ஏற்றுவது இந்த கசந்த சஷ்டி நாட்களில் சிறப்பான பலனை தரும். இந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 6 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

முருகன் மந்திரம்

ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

இந்த மந்திரத்தை சஷ்டி நாட்களில் ஒருமுறையேனும் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை சொல்பவர்களுடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் வறுமை அத்தனையும் நீங்கும், செல்வ செழிப்பு உயரும், என்பது அகத்தியருடைய வாக்கு. அதைத்தான் நாம் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கிறோம். உங்களால் வீட்டில் தினை மாவு விளக்கு போட்டு இந்த மந்திரத்தை சொல்ல முடியாதா.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியது

ஒரு சில கடைகளில் தினை மாவு லட்டு கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள் முருகப்பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அந்த முருகனுக்கு ஒரு விளக்கு போடுங்கள். முருகன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஆறு முறை படியுங்கள். அந்த லட்டுவை கோவிலுக்கு வரும் முருக பக்தர்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். வேறு என்ன. கோடான கோடி புண்ணியமும், கோடான கோடி செல்வத்தையும் அந்த மிருகப் பெருமான் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பான். இந்த எளிமையான வழிபாடு, கந்த சஷ்டி விரத நாட்களில் முருக பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கையோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by