
சமையலறை என்றாலே அங்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் பல வகை இருக்கின்றன. அதிலும் ஒன்றிரண்டு பொருட்களை தவறாமல் தினமும் பயன்படுத்த வேண்டியதிருக்கும். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் தினமும் தொடர்ந்து தவறாமல் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்னவென்றால் தோசைக்கல் மடற்றும் கடாய். இவை இரண்டு பொருள்களும் தினசரி அனைவரும் நிச்சயம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாகும். இந்த பொருட்களை தினமும் அடுப்பின் மீது வைத்து பயன்படுத்துவதால் இவற்றின் அடிப்புறம் சீக்கிரத்தில் கருமை அடைந்து விடும். அதிலும் இந்த கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக விடாப்பிடியாக மாறி, எவ்வளவு தேய்த்தாலும் கடாயின் நிறம் சற்று கருப்பாகவே இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும் நம் வாங்கியபோது இருந்த கலகலப்பை வர வைப்பதென்பது பலனளிக்காது. தேய்த்து தேய்த்து கைகள் தான் புண்ணாகும். எனவே கடையின் அடிப்புறம் இருக்கும் கருமையை நீக்க இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் இருக்கும்.
முதலில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் கடாய் சீக்கிரத்தில் கருமையாவதை தடுப்பதற்கு சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அதற்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும் கடாயை அப்படியே அடுப்பின் மீது நேரடியாக வைக்காமல், ஒரு துணியை வைத்துத் துடைத்து அல்லது ஈரப்பதம் நன்றாக காய்ந்த பின்னர் அடுப்பின் மீது வைத்து பயன்படுத்த வேண்டும். அதேபோல் கடாய் உபயோகிக்கும் பொழுது வேகமான தீயில் வைப்பதை விட சற்று குறைவான தீயில் வைத்து பயன்படுத்தினால் கருமை நிறம் அந்த அளவிற்கு விடாப் பிடியாக பிடித்து.
முதலில் கருமைநிறம் படிந்த கடாயை எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு அந்த கடாய் உள்ளே நுழையும் அளவிற்கு இருக்கும் பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு நிறைய தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைத்து விட வேண்டும்.
பிறகு வீட்டில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் வாஷிங் லிக்யூட் 3 ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்க்க வேண்டும். பிறகு வாஷிங் பவுடர் 3 ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் லிக்விட் இருந்தால் அதில் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சோடா உப்பு 3 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை பழம் அல்லது எலுமிச்சை பழத் தோல்களை இதனுடன் இரண்டு அல்லது நான்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இவை அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு, கடாயை இதன் உள் நுழையுமாறு வைத்துவிட வேண்டும். இதன் அடிப்புறம் கீழே இருக்குமாறு வைக்க வேண்டும். சிறிது நேரம் தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்துவிட்டு மூன்று மணிநேரத்திற்கு அப்படியே வைத்து விடவேண்டும்.
பின்னர் தண்ணீர் சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே கடாயை வெளியே எடுக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஹார்பிக் லிக்விட் 2 ஸ்பூன், டிஷ் வாஷ் லிக்விட் ஒரு ஸ்பூன் மற்றும் சோடா உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பிறகு சேண்ட் பேப்பர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள லிக்விடை கடாயின் அடிப்புறத்தில் லேசாக ஊற்றி தடவி விட வேண்டும். பிறகு சேண்ட் பேப்பர் மற்றும் இந்த லிக்விட் வைத்து நன்றாக தேய்த்து கழுவினால் கடாய் புதியது போல் பளபளவென்று மாறிவிடும்.