- Advertisement -
சமையல் குறிப்புகள்

2 நிமிடத்தில் சூப்பரான அமராவதி துவையல் செய்வது எப்படி? இதை வரமிளகாய் துவையல் என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யக்கூடிய துவையல் தான் இது. ஆனால் இதனுடைய சுவையில் நல்ல வித்தியாசம் இருக்கும். காரசாரமான இந்த துவையலை சுடச்சுட இட்லி, சுட சுட கல் தோசை, சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அட்டகாசமாகத்தான் இருக்கும். வித்தியாசமான இந்த குறிப்பு மிஸ் பண்ணாதீங்க. ஒரு முறை நிச்சயம் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாக்கணும். எல்லோரும் இரண்டு இட்லி, இரண்டு தோசை சேர்த்து சாப்பிடுவார்கள்.

முதலில் சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மிளகாய் – 5 போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அப்படியே இருக்கட்டும். அடுத்து அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் வர மல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெரிய தக்காளி பழம் நறுக்கியது – 1, உப்பு – 2 சிட்டிகை, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், போட்டு இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதையும் ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போது மிக்ஸி ஜாரில் வறுபட்ட மிளகாய், வறுத்த வரமல்லி சீரகம் தக்காளி விழுது உள்ளது. இதோடு வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், ஊற வைத்து இருக்கும் புளியைப் போட்டு, சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் சூப்பரான துவையல் நமக்கு கிடைத்திருக்கும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். (ரொம்பவும் விழுதுபோல அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டாலே சட்னி நன்றாக இருக்கும்.)

- Advertisement -

இந்தத் துவையலில் நறுக்கிய பச்சை வெங்காயத்தை போட்டு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இதை பரிமாற வேண்டியதுதான். இட்லிக்கு இதைத் தொட்டு சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். சுட சுட வெள்ளை சாதத்தில் போட்டு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அவ்வளவு ருசியாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: இதில் புளிப்பு சுவை, உப்பு, காரம் அனைத்தும் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாவை இழுத்து இழுத்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். சாப்பிட்ட பின்பும் இதனுடைய காரம் நாக்கில் நிற்கும்.

- Advertisement -