
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வருமானம் சீராக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் என்று. வீட்டில் சந்தோஷமாக தீபாவளி பர்ச்சேஸ் தொடங்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் கடமை தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி பார்ப்பது, இது போன்ற வேலைகள் எல்லாம் இன்று நல்லபடியாக நடந்து முடியும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். சொந்த ஊர் வந்து, உங்களுடைய நேரத்தை சந்தோஷமாக செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிம்மதி கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் சாதனை படைக்கக் கூடிய நாளாகவும் அமையும். வருமானம் சீராக இருக்கும். சுபசலவர்கள் ஏற்படும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். பிரிந்த உறவுகளை சந்திக்கும் போது உடல் சோர்வும் மறந்து போகும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் இருந்து வந்த கசப்பான சம்பவங்கள் மறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு ஆர்வத்தை காட்டுவீர்கள். குடும்ப உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பண்டிகையை கொண்டாட ஒவ்வொருவராக வீட்டில் தயாராகி விடுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட, விவேகம் தான் அதிகமாக இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். திறமையாக பேசி, நிறைய விஷயங்களை சாதித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். பஞ்சாயத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லதே நடக்கும். இறைவழிபாடு செய்வது மனதை அமைதிப்படுத்தும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். சில விஷயங்களை செய்யலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றம் இருக்கும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. வீண்விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக கடன் வாங்க வேண்டாம். வருமானத்திற்கு ஏற்ப செலவை சரி செய்வது புத்திசாலித்தனம்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. பலவிதமான யோசனைகள், பலவிதமான சிந்தனைகள் உங்களுடைய நேரத்தை வீணடிக்கும். கவனமாக இருக்க வேண்டும். கடமைகளை சரியாக செய்து முடிக்க வேண்டும். அனுபவம் சாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். முன்கோபம் வேண்டாம். அவசர முடிவுகளும் எடுக்க வேண்டாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். வீண்விரய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்த நாள் இனிய நாள் தான்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். மாத கடைசி வரை பணம் கையில் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.