- Advertisement -

மகாளய அமாவாசையில் பெண்கள் செய்யக்கூடாத தவறு

- Advertisement -

நாளைய தினம் 21-9-2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து மஹாளய அமாவாசை தினம் வரவிருக்கிறது. இந்த நாளில் முன்னோர்கள் வழிபாடு செய்வது, அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது, மறைந்த முன்னோர்களுக்காக படையல் போட்டு வழிபாடு செய்வது, நம்முடைய குடும்பத்திற்கு கோடி கோடி புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆகவே நாளைய தினத்தை யாரும் தவற விடாதீங்க.

உங்களால் எந்த வழிபாடும் செய்ய முடியவில்லை என்றாலும் சரி, முன்னோர்களை மனம் உருக நினைத்து அவர்களை இரு கைகளை கூப்பி வணங்கி வழிபாடு செய்து நல்லது, இந்த பூலோகத்திற்கு நம்மை கொண்டு வந்த, மறைந்த முன்னோர்களுக்கு நன்றி மட்டுமாவது தெரிவிக்க வேண்டும். நாளைய தினம் முன்னோர்கள் வழிபாட்டை தவறவிட்டவர்களுக்கு கட்டாயம் வாழ்க்கையில் கஷ்டம் வரும் என்ற தகவலை ஆழ பதிய வைத்து இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.

- Advertisement -

மஹாளய அமாவாசை சமையலில் என்னென்ன காய்கறிகளை சேர்க்கலாம். நாளை கட்டாயம் சமையலில் எந்தெந்த காய்கறிகளை சேர்க்கக்கூடாது, குறிப்பாக நாளை சமைக்கும் போது சுமங்கலி பெண்கள் எந்த ஒரு தவறை செய்யக்கூடாது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலையும், நாளை அமாவாசை நாளில் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பற்றியும் தான் இன்றைய பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அமாவாசை சமையலில் சேர்க்க வேண்டிய சேர்க்க வேண்டிய காய்கறிகள்

அவரைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், தட்டை, பூசணிக்காய், வாழைக்காய், வாழைத்தண்டு, மாங்காய், இஞ்சி, நெல்லிக்காய், இவைகளை எல்லாம் பயன்படுத்தி அமாவாசைக்கு சமையல் செய்யலாம். இது தவிர உளுந்த வடை, பாசிப்பருப்பு பாயாசம், அப்பளம் இது போன்ற உணவுகளையும் படைகளின் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அமாவாசை சமையல் சேர்க்க கூடாத காய்கறி

முட்டைக்கோஸ், நூல்கோல், முள்ளங்கி, கீரை வகைகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், வெங்காயம், பூண்டு இவைகளை அமாவாசை சாப்பாட்டில் அறவே தவிர்ப்பது நல்லது. நம்முடைய முன்னோர்கள் அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிட்டாலும் இந்த நாளில் அசைவ சாப்பாட்டை முன்னோர்களுக்கு படைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமங்கலி பெண்கள் சமைக்கும்போது செய்யக்கூடாது தவறு

சுமங்கலிகளாக இருக்கும் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்காக சமைக்கும் போது, வெறும் வயிற்றோடு சமைக்கக்கூடாது என்று சாஸ்திரம் கூறப்பட்டுள்ளது. நீங்கள் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு காபி டீ குடித்து ஏதாவது லேசான உணவை இரண்டு வாயாவது சாப்பிட்ட பிறகுதான் சமைக்க வேண்டும்.

- Advertisement -

உணவு சாப்பிட முடியவில்லை என்றாலும் இரண்டு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு சமைப்பது நல்லது. சுமங்கலி பெண்கள் வெறும் வயிறோடு முன்னோர்களுக்கு படையல் போல உணவு சமைக்கக்கூடாது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சில குடும்பங்களில் பாரம்பரியமாக அமாவாசை என்றால் இந்த உணவை மட்டும் தான் சமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும். அப்படி பாரம்பரியமாக நீங்கள் கடைப்பிடித்து வரக்கூடிய பழக்க வழக்கங்களை என்றுமே மாற்றக்கூடாது. உங்கள் அம்மா, உங்கள் பாட்டி எப்படி உங்கள் குடும்ப வழக்கத்தை உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்களோ அதைப்போல உங்கள் வழிபாட்டை மேற்கொள்வதும் மிக மிக அவசியம்.

அமாவாசை மந்திரம்

வழிபாட்டின் போது பித்ருக்களை நினைத்து “ஓம் பித்ருதேவாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லுவது சிறப்பு.

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது

சாஸ்திரப்படி சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. ஒரு மகனுக்கு அப்பா இருந்தால், அந்த மகன் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்றும் சாத்திரம் சொல்கிறது. (என் அப்பா அவர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் கொடுப்பதை தவிர விட்டால், அவருக்கு பதில் மகன் அந்த காரியத்தை செய்யலாமா நிச்சயம் செய்யக்கூடாது.) ஒரு ஆண் மகனுக்கு அப்பா இருக்கிறார்.

அந்த ஆண்மகன் தன்னுடைய மாமனார் மாமியாருக்காக தர்ப்பணம் கொடுக்கலாமா என்று கேட்டால், நிச்சயம் கொடுக்கக் கூடாது என்று தான் சாஸ்திரம் சொல்கிறது. அப்பா இருக்கும்போது மகன் எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய மறைந்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கவே கூடாது.

சாத்திரம் இதுதான் என்றால், அதை கடைபிடிப்பது நல்லது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு சாஸ்திரம் நிச்சயம் நன்மை செய்யும். விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு மேலே சொன்ன விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: நாளை 21-09-2025 மகாளய அமாவாசை வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம்

உங்களுடைய நம்பிக்கையை பொறுத்துதான் இந்த வழிபாடு பலன் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றுங்கள். இல்லாதவர்கள் இதையெல்லாம் விட்டுவிடலாம் எதுவும் கட்டாயம் கிடையாது என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -