- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இளமையான தோற்றத்தில் பெரும் நெல்லிக்காய் ஃபேஸ் பேக்

- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் நாம் முறையான சருமப் பராமரிப்பை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதி இளமையான மற்றும் பிரகாசமான முகத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அதோடு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான சத்துக்களை நம்மால் தர முடியும். அது மட்டுமல்லாமல் இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முகத்தில் எந்தவித சுருக்கமும் ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.

- Advertisement -

இந்த இளமை தோற்றத்தை தக்க வைக்க கூடிய பொருட்களாக சில பொருட்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் மிகவும் சிறப்பான பலனை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. நெல்லிக்காயை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுதும் சரி, தலைக்கு பயன்படுத்தும் பொழுதும் சரி எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ அதே அளவிற்கு நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதும் நல்ல பலனை தருகிறது.

நெல்லிக்காயை நாம் நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் வயதாகும் தோற்றத்தை தடுக்க உதவுகிறது. மேலும் சரும நிறத்தை அதிகரிக்கவும் இறந்த செல்களை நீக்குவதற்கும் உதவி செய்கிறது. அடுத்ததாக நாம் பயன்படுத்தக்கூடியது கற்றாழை. கற்றாழையிலும் இளமை தோற்றத்தை தக்கவைக்கக்கூடிய தன்மைகள் நிறைந்திருக்கிறது. மேலும் சரும பாதிப்பிலிருந்து நீங்கவும் இளமை தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளவும் சருமத்திற்கு தேவையான குளிர்ச்சி தன்மையை தருவதற்கும் இது உதவுகிறது.

- Advertisement -

அடுத்ததாக மஞ்சள் தூள். இது நம் முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தை தர உதவுகிறது. கடைசியாக இந்த பேக்கில் சேர்க்கப் போவது காபித்தூள். காபித்தூள் வயதாகும் தோற்றத்தை தடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் இதில் விட்டமின் பி3 இருப்பதால் தோல் கேன்சர் வருவதை தடுப்பதற்கு இது உதவுகிறது. மேலும் சூரியனால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது.

இப்பொழுது ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் சாறை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து பிறகு அதில் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு காபி தூளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரை லேசாக முகத்தில் தடவி ஸ்கிரப் செய்வது போல் முகத்தை நன்றாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

இதையும் படிக்கலாமே: புருவ முடி அடர்த்தியாக வளர சீரம்

இப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் நாம் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் பொழுது நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் இழந்த செல்கள் சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தையும் அதே சமயம் முகத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி சரும நிறத்தையும் அதிகரிக்கும்.

- Advertisement -