
எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்து கொண்டு இருப்பவர்களும், ஒரு படி ஏறினால் பத்துப்படி இறங்க கூடிய சூழ்நிலையில் இருப்பவர்களும், கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருப்பவர்களும், இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் முன்னோர்களின் ஆசி கிடைக்காததும் ஒரு காரணமாகவே திகழும். அப்படி முன்னோர்களின் ஆசியை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் பொழுது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மாதந்தோறும் செய்ய இயலாதவர்கள் இந்த ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அப்படிப்பட்ட ஆடி அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை என்பது வரும். அன்றைய தினம் தெய்வ வழிபாட்டை செய்வதை விட முன்னோர்களை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அன்றைய தினம் முன்னோர்களின் நினைத்து விரதம் இருந்து சமைத்து காக்கைக்கு உணவளித்து பிறகு சாப்பிடுவது என்பது பலரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறைதான். இன்னும் சிலரோ குறிப்பிட்ட அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள். அதே போல் பசுமாட்டிற்கு அகத்திக் கீரையையும் தானமாக தருவார்கள். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தை, புரட்டாசி, ஆடி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை என்பது சிறப்பு மிகுந்த அமாவாசையாக திகழ்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இந்த மாதத்தில் அது ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் இரண்டு பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்து செய்யக்கூடிய வழிபாடு என்பது முன்னோர்களின் ஆசியை பெற உதவக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அந்த எளிமையான வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த ஆடி அமாவாசை தினத்தன்று நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் மளிகை கடைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட அளவு வெள்ளத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் துணி கடைக்கு சென்று புதிதாக ஏதாவது ஒரு துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அது வேஷ்டி, துண்டு, ஜாக்கெட் பிட் என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் எது
இதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்றவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு அன்னதானத்தை செய்ய வேண்டும். வீட்டில் சமைத்து தெரிந்தவர்களை அழைத்து வந்து சாப்பாடு போடுவதை விட வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. குறைந்தபட்சம் 11 பேருக்காவது உங்கள் கைகளால் நீங்கள் அன்னதானம் செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய முன்னோர்கள் சாபம் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் இருக்கக் கூடிய தோல்விகளும், கஷ்டங்களும், துயரங்களும் விலகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:இருண்ட வாழ்க்கையை பிரகாசமாக்கும் ஆடி அமாவாசை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தானத்தை ஆடி அமாவாசை தினத்தன்று செய்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.