- Advertisement -
மந்திரம்

மார்கழி வெள்ளிக்கிழமைகளில் துதிக்க வேண்டிய ஆண்டாள் ஸ்லோகம்

உடல் மற்றும் மனதில் இளமை இருக்கும் காலத்தில் வயது வந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்விப்பது அக்கால நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்காலங்களில் இளம் வயது ஆண், பெண் இருவரும் தங்களின் வாழ்வில் பொருளாதார தன்னிறைவு பெற தங்களின் திருமணத்தை தள்ளி போடுகின்றனர். இதனால் பிற்காலங்களில் திருமணம் ஆவதில் இருபாலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு எல்லாம் சரியாக இருந்தும் திருமணம் கால தாமதம் ஆகிறது. திருமணம் ஆன தம்பதிகளிடமோ ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். இவையெல்லாவற்றையும் போக்கி சுகமான இல்லற வாழ்வை தரும் “ஆண்டாள் ஸ்லோகம்” இதோ.

ஆண்டாள் ஸ்லோகம்

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த

- Advertisement -

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் ஆண்டாள் என்றழைக்கப்படும் திருப்பாவை அருளிய கோதை நாச்சியாரின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும் ஆண்டாளுக்குரிய மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளின் மனஸ்தாபங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நோன்யம் பெருகும். தங்களின் பிள்ளைகள் சார்பாக அவர்களின் பெற்றோர்களும் ஆண்டாளை வணங்கி இம்மந்திரத்தை துதிக்கலாம்.

- Advertisement -

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம் என்பதே இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
சுதர்சன மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Andal slogam in Tamil. It is also called Andal manthiram in Tamil or Kanavan manaivi otrumai manthiram in Tamil or Andal stuthi in Tamil or Srivilliputhur andal in Tamil.

- Advertisement -