
ஈவினிங் ஸ்நாக்ஸ்களை வெளியில் வாங்கி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டால், முதலில் வாங்குவது சமோசாவை தான் வாங்குவார்கள். ஏன்னென்றால் பஜ்ஜி, போண்டா, வடை இவைகளை கூட வீட்டில் அடிக்கடி செய்து விடுவார்கள். ஆனால் சமோசாவை செய்ய மாட்டார்கள்.இதை செய்வது கொஞ்சம் கடினமான வேலை, சரியாக மடித்து சுடவில்லை என்றால் சமோசாவில் இருக்கும் மசாலாக்கள் வெளியே வந்து விடும். எனவே இந்த சமோசாவை மட்டும் நன்றாக பழகியவர்கள் மட்டும் தான் செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவு எல்லோரும் செய்யக் கூடிய வகையில் மிகவும் சுலபமாக சமோசா செய்வது எப்படி என்று தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
அப்பளம் சமோசா செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 4, பச்சை மிளகாய் -2, மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன், தனியா தூள்-1/4 டீஸ்பூன், சாட் மசாலா- 1/4 டீஸ்பூன், மிளகு -1/4 டீஸ்பூன், சீரக தூள் -1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1/4 டீஸ்பூன், வெள்ளை அவல் – 3 டீஸ்பூன், மைதா -1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம், பெரிய அப்பளம் -10.
அப்பளம் சமோசா செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயத்தை நல்ல நீளமாக நறுக்கி ஒரு பவுலில் சேர்த்து கொள்ளுங்கள். அத்துடன் பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கி சேர்த்த பிறகு மிளகாய் தூள், தனியா தூள், சாட் மசாலா, மிளகுத் தூள், சீரகத்தூள், மஞ்சள், உப்பு என அனைத்தையும் சேர்த்த பின் அவலை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அவல் மெலிதான அவலாக சேர்த்துக் கொள்ளுங்கள். தடியான இருக்கும் அவலோ அல்லது சிகப்பு அவலோ சேர்க்க வேண்டாம். இந்த அவல்சேர்க்கும் போது வெங்காயம்,பச்சை மிளகாய் இதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் விடும் அவல் இந்த தண்ணீரை உறிந்து விடும் உங்களுக்கு இந்த அவல் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதில் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கலந்து கொள்ளுங்கள். இதை எல்லாம் கலந்து அப்படியே எடுத்து வைத்து விடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அப்பளத்தை நனைத்து எடுத்து அதை இரண்டாக கத்தி வைத்து கட் செய்து கொள்ளுங்கள. இப்போது அதில் ஒரு பாதியை பொட்டலம் (பொக்கை போல் ) மடிப்பது போல் மடித்து, ரோல் செய்து அதற்குள் தயாரித்து வைத்து வெங்காய ஸ்டப்பிங் உள்ளே வைத்து மைதா மாவை தொட்டு அதன் ஓரங்களில் ஒட்டி விட வேண்டும். அவ்வளவு தான் சுலபமாக சமோசவை மடித்து வைத்து விட்டோம்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தயார் செய்து வைத்த சமோசாக்களை அதில் போட்டு பொரித்து எடுத்து விட வேண்டியது தான். இந்த முறையில் சமோசா செய்வது கடினமான வேலையே இல்லை.
அப்பளத்தை தண்ணீரில் அதிக நேரம் ஊற வைக்காமல் தண்ணீரில் நனைத்தவுடன் வெளியில் எடுத்து விட வேண்டும். அதை இரண்டாக பிரித்து கடைகளில் பொருட்கள் வைத்து கொடுக்கும் பொட்டலம் மடிப்பார்கள் அதைப் போல ரவுண்ட் செய்து உள்ளே ஸ்டாப்பிங் வைத்து மைதா மாவை வைத்து அதை மூடிவிட வேண்டும் அவ்வளவு தான்.
இதையும் படிக்கலாமே: இனி கீரை வாங்கினால் இப்படி பக்கோடா செய்து கொடுத்து பாருங்கள். கீரை வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
இது மிகவும் சுலபமான முறை தான் இந்த முறையில் நீங்களும் ஐந்தே நிமிடத்தில் இந்த அப்பள சமோசாவை செய்து சாப்பிட்டு பாருங்கள்.