இனி கீரை வாங்கினால் இப்படி பக்கோடா செய்து கொடுத்து பாருங்கள். கீரை வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -

கீரை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதில் இந்தக் கீரை தான் என்று இல்லை அனைத்து வகை கீரையுமே நல்லது தான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த கீரையை சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. அது என்னமோ கீரையை மட்டும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. பொதுவாக கீரையை சாப்பிட மாட்டார்கள் அதிசயமாக ஒன்று இரண்டு குழந்தைகள் கீரை சாப்பிடுவார்கள். அப்படி கீரை சாப்பிடாத குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த உணவாகவே மாற்றி சமைத்து தந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் கீரையை வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கீரையை எண்ணெயில் போட்டு பொரிப்பதால் அதன் சத்துக்கள் வீணாகி ஏதுவும் வீணாகி போகாது. பெரியவர்கள் கீரையை எப்படி இருந்தாலும் சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகளை சாப்பிட வைப்பது தான் முக்கியம். அதனால் இது போன்ற வகைகளில் அவர்களுக்கு உணவில் கீரையை சேர்த்து கொடுத்து விடலாம்.

- Advertisement -

கீரை பக்கோடா செய்முறை:
கீரை பக்கோடா செய்ய முதலில் கீரையை நறுக்கி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கீரையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் பிறகு ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்தமல்லி, ஒரு சின்ன துண்டு இஞ்சி என அனைத்தையும் பொடியாக நறுக்கி இந்த கீரையுடன் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள். இது 10 நிமிடம் அப்படியே கூற வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து ஊறிய இந்த கீரை கலவையில் 1 கப் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், தனியா தூள் 1, உப்பு கால் டீஸ்பூன் பெருங்காயம் ஒரு சிட்டிகை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.(உங்களுக்கு விருப்பம் இருந்தால் கரம் மசாலா கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்) இதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருக்காது. கீரை, வெங்காயம் இதிலிருந்து தண்ணீர் விட்டிருக்கும் அந்த தண்ணீரே போதுமானது. தண்ணீர் பற்றவில்லை என்றால் மட்டும் லேசாக தெளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள். இந்த பக்கோடா போட்டு பொரித்து எடுக்க எண்ணெய் நன்றாக காய வேண்டும். இப்போது நீங்கள் கலந்து வைத்த இந்த மாவை பக்கோடா போடுவது போல் சின்ன சின்னதாக எடுத்து போட்டு பொரித்து விடுங்கள்.

இதில் நம் கவனிக்க வேண்டிய ஒன்று இந்த மா வை விட கீரை அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் எடுத்த ஒரு கப் கீரை குறைவாக இருந்தால், இன்னும் கொஞ்சம் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை மாவு இல்லையா? இன்ஸ்டன்ட் ஆக 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லி, தோசை வார்க்க மாவு எப்படி தயாரிப்பது?

அப்போது தான் இதை நாம் எதற்காக செய்கிறோமோ அந்த பலன் குழந்தைகளுக்கு கிடைக்கும். இதில் கீரை அதிகமாக இருந்தால் பக்கோடாவும் அதிக மொறு மொறுப்புடன் இருக்கும். கீரை வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -