- Advertisement -
சமையல் குறிப்புகள்

அரைக் கீரையுடன், பருப்பு சேர்த்து இப்படி சுவையான கூட்டு செய்து கொடுத்தால், இதன் சுவைக்கு நீங்கள் எவ்வளவு சாதம் செய்தாலும் பத்தவே பத்தாது

- Advertisement -

இப்பொழுது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் பலவித பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அவ்வாறு கீரையை ஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடைசல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே அரைக்கீரையுடன் பருப்பு சேர்த்து இப்படி கூட்டு செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து பாருங்கள். தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த சுவையான அரைக்கீரை கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – 100 கிராம், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 8, தக்காளி – ஒன்று, தேங்காய் துருவல் – 3 ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கட்டு அரைக் கீரையை எடுத்துக் கொண்டு, அதனை சுத்தமாக ஆய்ந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 100 கிராம் பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, இவற்றை அடுப்பின் மீது வைத்து பருப்பு நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் பருப்பை தனியாக எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் வைத்து, அதில் ஆய்ந்து வைத்துள்ள அரைக் கீரை மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் தேங்காய்த்துருவல், 4 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி இவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மீதமிருக்கும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

அதன்பிறகு கீரை நன்றாக வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கலந்து விட்டு, 5 நிமிடம் கொதித்ததும் இவற்றை இறக்கி விட வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி, இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -