- Advertisement -

நினைத்தது நடக்க அஸ்வந்த நாராயணர் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை நினைத்திருப்போம். இது நடந்தால் நன்றாக இருக்கும், அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று பலவிதமான நினைப்புகள் நம் மனதிற்குள் இருக்கும். இருப்பின் ஒரு சில விஷயங்கள் மட்டுமே நடைபெறும். மற்ற விஷயங்கள் நடைபெறாது. இதற்கு நம்முடைய கடின உழைப்பு ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் தெய்வத்தின் அருளும் ஒரு விதமான காரணமாகவே திகழ்கிறது. கடவுள் நமக்கு எந்த நேரத்தில் எதை தர வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத்தான் தருவார் என்றும் நம்மால் நினைத்தது அனைத்தையும் பெற முடியாது என்றும் கூறுவது உண்டு. இதைதான் உடல் முழுவதும் எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும் என்று கூறுவார்கள். அப்படி இருக்கும் பொழுது நாம் மனதில் நினைத்தது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு வழிபாடு இருக்கிறது. அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அஸ்வந்த நாராயணர் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்தையும் தந்து சிறப்பான வாழ்க்கையாக வாழ்வதற்கு உதவி புரிபவர் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார். ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கும். அந்த அவதாரத்தில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவை நாம் வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் மகாவிஷ்ணுவின் மறு உருவமாக திகழக்கூடியது தான் அரசமரம்.

- Advertisement -

பொதுவாகவே அரசமரம் என்பது அனைத்து மரங்களுக்கும் அரசனாக திகழக்கூடியது என்றும், அரச மரக் குச்சியால் யாகம் செய்பவர்களுக்கு ராஜ வாழ்க்கை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரச மரத்தின் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கி இருக்கிறது. அரச மரத்தில் இருக்கக்கூடிய நாராயணரை அஸ்வந்த நாராயணர் என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட அஸ்வந்த நாராயணனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் ராஜ யோகம் நமக்கு கிடைப்பதோடு நம் மனதில் நாம் நினைத்தது அப்படியே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு முன்பாக அரச மர இலை ஒன்றை பறித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த அரச இலையை பன்னீரால் சுத்தம் செய்து அதன் நான்கு புறங்களிலும் சந்தனம் குங்குமத்தை வைத்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைக்க வேண்டும். அந்த தாம்பாள தட்டிற்கும் சந்தனம் குங்குமம் வைத்திருக்க வேண்டும். இப்பொழுது இந்த இலையின் நடுவில் கனமான நரம்பு போகும் அல்லவா? அந்த நரம்பிற்கு வலது புறமாக மஞ்சளையும் இடது புறமாக குங்குமத்தையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு மஞ்சள் குங்குமத்தை அந்த இலையில் வைக்கும் பொழுது நமக்கு எது அத்தியாவசியமாக நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டு வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்துவிட்டு அஸ்வந்த நாராயணரின் மந்திரத்தை கூற செய்ய வேண்டும். அந்த இலை காயும் வரை அப்படியே இருக்கட்டும் தினமும் இந்த இலையில் இருக்கக்கூடிய மஞ்சள் மற்றும் குங்குமத்தை நம்முடைய நெற்றியில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். இலை காய்ந்ததும் அதை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். திரும்பவும் வியாழக்கிழமை புதிதாக இலையை பறித்து வந்து இதே வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இலை பூஜை அறையில் இருக்கும் வரை தினமும் அஸ்வந்த நாராயணரின் மந்திரத்தை ஒரு முறை முழு மனதோடு கூற வேண்டும்.

மந்திரம்

 ” ஓம் நமோ நாராயணன் தேவம்
சங்க சக்ர கதாதரம் பக்தானாம்
இஷ்ட தாதாரம் சர்வ மங்கள காரகம் “

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏலக்காய் பரிகாரம்

முழு மனதோடு நாராயணரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு மனதில் நினைத்தது நினைத்தபடி நடக்கும், ராஜயோகமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -