ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று வரவே கூடாது. அது கடனை வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது கடனாக பிறருக்கு பணத்தை தருவதாக இருந்தாலும் சரி. கடன் என்ற மூன்றெழுத்து நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி என்ற நான்கெழுத்து நம் வாழ்க்கையை விட்டு போய்விடும் என்றே கூறலாம். நிம்மதி மட்டுமல்ல சந்தோஷமும் நம்மை விட்டு போய்விடும். ஒருவருடைய கர்ம வினையை பொறுத்து தான் அவர் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது என்பது நிகழும்.
மேலும் கொடுத்த பணத்தை திரும்ப பெறவும் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கவும் நம்முடைய கர்ம வினை என்பது மிக முக்கிய காரணமாக திகழ்கிறது. பலராலும் கடனை வாங்கிவிட்டு அதை திரும்ப அடைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கு எப்படி கர்ம வினைகள் காரணமாக திகழ்கிறதோ, அதே போல் தான் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் இருப்பதற்கும் கர்ம வினைகள் காரணமாக திகழ்கிறது. இப்படிப்பட்ட பணம் தொடர்பான கர்ம வினை தீர்வதற்கும் கடன் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும் ஏலக்காய் வைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்
பணம் நம்மிடம் இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் பண வசியம் என்பது வேண்டும். ஒருவருக்கு பணவசியம் இருந்து விட்டால் அவர் எவ்வளவு செலவு செய்தாலும் செலவு செய்த பணத்தைவிட பல மடங்கு அதிகமாக அவரிடம் பணம் திரும்ப வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களால் தான் கொடுத்த பணத்தையும் திரும்ப பெற முடியும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்துவதற்கும் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும் ஏலக்காய் மிகச்சிறந்த தாந்த்ரீக பொருளாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ஏலக்காயை வைத்து செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்றே செய்ய ஆரம்பித்த விட வேண்டும். வியாழக்கிழமை அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் 11 ஏலக்காயை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு மூடி வைத்து தலைக்கு மேல் வைத்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். இந்த பரிகாரத்தை யார் பணத்தை கொடுத்தார்களோ அவர்கள்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் செய்யக்கூடாது. மறுநாள் காலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு இந்த ஏலக்காய் ஊறிய தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் நம்முடைய அன்றாட வேலைகளை செய்து முடித்துவிட்டு யாரிடம் நாம் பணம் கொடுத்தோமோ அவர்களிடம் சென்று கொடுத்த பணத்தை திரும்பி கேட்க வேண்டும்.
இப்படி ஏலக்காய் தண்ணீரை அருந்திவிட்டு பணம் கொடுத்தவரிடம் நாம் திரும்பக் கேட்கும் பொழுது பணத்தை தராமல் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட மனம் மாறி வாங்கிய பணத்தை திரும்பத் தர ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் இப்படி ஏலக்காயை தண்ணீரில் ஊற வைத்து வெள்ளிக்கிழமை அந்த தண்ணீரை அருந்திவிட்டு பணத்தை கேட்க செல்வதன் மூலம் விரைவிலேயே கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும். இத்தனை வாரங்கள்தான் இதை செய்ய வேண்டும் என்று கணக்கு இல்லை. நம்முடைய பணம் திரும்ப கிடைக்கும் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: வளங்களை சேர்க்கும் மாத சிவராத்திரி வழிபாடு
தெய்வ வழிபாடும் பரிகாரமும் நம்முடைய கர்ம வினைகளை பொருத்தே பலன் தரக்கூடியது. எந்த ஒரு வழிபாட்டையும் பரிகாரத்தையும் நாம் செய்யும்பொழுது முதலில் நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும், பிறகுதான் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். ஆனால் தாந்திரீக பரிகாரம் என்பது கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை முழுமனதோடு செய்து பணத்தை திரும்ப பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.