- Advertisement -

ராகுவால் சிரமத்திற்கு உள்ளாக போகும் ராசிக்காரர்கள்

நவகிரகங்களில் அசுப பலனை தரக் கூடிய கிரகங்களாக விளக்கக்கூடியவர்கள் தான் இந்த ராகுவும் கேதுவும். இவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தே தான் தங்களுடைய பயணத்தை தொடர்வார்கள். நிழல் கிரகங்களாக இருக்கக் கூடிய இவர்கள் 18 பாதங்களுக்கு ஒரு முறை தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அதிலும் இவர்களுடைய பயணம் பின்னோக்கியதாகவே இருக்கும்.

சனிபகவானுக்கு பிறகு மெதுவாக நகரக்கூ டிய கிரகங்கள் எனில் அது ராகுவும் கேதுவும் தான். இத்துடன் அசுப பலன்களையும் தரக்கூடியதால் இந்த கிரகங்களை கண்டும் பலரும் அச்சப்படுவார்கள். அப்படியான இந்த ராகுவும் கேதுவும் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இதன் தாக்கமாக 12 ராசிகளுக்கும் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாகவே ஒரு கிரகத்தினுடைய மாற்றம் மற்ற 12 ராசிகளுக்கும் நிச்சயமாக மாறுதல்களை ஏற்படுத்தும். அந்த வகையில் மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். இந்த இடமாற்றமானது உங்களுக்கு அத்தகைய சாதகமாக இல்லை. இதனால் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு மன உளைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மிக கவனமாக வார்த்தைகளை கையாள வேண்டும். எதிரிகளால் பல சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. வேலை இடம், பணியிடம் என அனைத்து இடத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானத்தடை ஏற்படும் எனவே பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

சிம்ம ராசி

ராகு பகவான் இந்த ராசியில் எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் இவர்களுக்கு எதிர்ப்பாராத பல நிகழ்வுகள் காத்திருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருங்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையேமனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை கவனமாக கையாளுங்கள். பிறருடன் பேசும் போது எச்சரிக்கையுடன் இருங்கள். மொத்தத்தில் அனைத்திலும் விழிப்புணர்வுடன் செய்யப்பட வேண்டிய காலம்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காம் வீடு ராகு பகவான் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய நல்ல பலன்கள் கூட தாமதமாக தான் கிடைக்கும். அவ்வப்போது சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம் எழுந்தால் அமைதியாக விலகி செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். நிதி நிலைமை மோசமாக கூடிய வாய்ப்புகள் அதிகம். அனைத்திலும் யோசித்து செயலாற்றக் கூடிய காலக்கட்டம் இது.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான அடிப்படை தொகுக்கப்பட்டவை ஆகும். இந்த கருத்துகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமேயானால் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -