- Advertisement -
ஜோதிடம்

சனி சுக்கிரன் சேர்க்கையால் யோகத்தை பெரும் ராசிகள்

நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்குபவர். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் இவர் இருக்கிறார். இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்து வருவார். இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார்.

அதே போல நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது அவர்களுக்கு பலவிதமான யோகங்களை வாரி வழங்குவதில் இவருக்கு நிகரும் இவரே தான். அப்படியான சுக்கிர பகவான் 2024 ஆம் ஆண்டு கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு ராசிகளின் சேர்க்கையால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகப் போகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள்என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மகர ராசி

சனி மற்றும் சுக்கிரன் செயற்கையால் உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை 2024 ஆம் ஆண்டு தரப்போகிறது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பணவரவு பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். மொத்தத்தில் நீங்கள் தொட்டாதெல்லாம் பொன்னாக மாறக் கூடிய காலம் இது.

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால் உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக மாறப் போகிறது. வியாபாரம் தொழிலில் இருந்து வந்து சிக்கல்கள் அனைத்தும் விலகி பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த புத்தாண்டு உங்களுக்கு தான் உண்மையிலேயே சிறப்பான புத்தாண்டாக இருக்க போகிறது அனுபவியுங்கள்.

- Advertisement -

மேஷ ராசி

இந்த ராசிக்காரர்களுக்கும் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் பலவிதமான நற்பலன்கள் கிடைக்க போகிறது. பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் பெருகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு பலவிதமான நற்பலன்கள் கிடைக்க போகிறது. இதனால் மற்ற ராசிக்காரர்கள் தங்களுக்கு நல்ல பலன் இல்லையா என்று சோர்ந்து விட வேண்டாம். மற்ற ராசிக்காரர்களை விட இவர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கப் போகிறது அவ்வளவு தான். ஜோதிட சாஸ்திரத்தில் எப்பொழுதும் ஒரு கிரகத்தின் பெயர்ச்சியானது மற்ற ராசிக்காரர்களுக்கு ஒரு சில பலன்களை தரும். அந்த வகையில் தான் இந்த மூன்று ராசிக்காரர்கள் பெரும் பலனை அனுபவிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிக்கலாமே: சனிபகவான் சதய நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்

மற்ற ராசிக்காரர்கள் எப்பொழுதும் போல தங்களுடைய உழைப்பையும் விடாமுயற்சியும் தொடர்ந்து செய்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறுவார்கள். இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இது அவர்வருடைய கிரக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றங்கள் உண்டு என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -