சனிபகவான் சதய நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்

sanibagvan
- Advertisement -

சனிபகவான் என்றாலே நீதிமான். இந்த நீதிமானை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இல்லை. நீங்கள் நல்லது செய்தால் நல்லது நடக்கும். தீமை செய்தால் தீமை நடக்கும். இதுதான் கர்மா. இந்த வேலையை செய்யக்கூடிய பொறுப்பை தான் சனிபகவான் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். அதனால் நல்லதே செய்யுங்கள். இவரை பார்த்து பயப்படவே வேண்டாம். வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழலாம்.

என்னதான் சொன்னாலும், சில பெயர்ச்சியின் மூலம் 12 ராசிகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ராகு பகவானுக்கு சொந்தமான சதய நட்சத்திரத்தில், சனி பகவான் வருகை தந்துள்ளார். அடுத்த வருடம் அதாவது 2024 வது வருடம் ஏப்ரல் மாதம் வரை, இவர் உதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை செய்யப் போகின்றார்.

- Advertisement -

இதன் காரணமாக மூன்று ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த மூன்று ராசிகள் என்னென்ன. அவர்களுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம், இனி வரக்கூடிய காலகட்டத்தில் நல்லபடியாக நடந்து முடியும். எதிரிகளாக, துரோகிகளாக இருந்த நண்பர்கள் கூட, நல்லவர்களாக மாறி உங்களை நாடி வருவார்கள். நஷ்டம் அடைந்த தொழில் மேன்மை அடையும். நஷ்டத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்கள், நிறைய லாபத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை உழைப்புக்கு ஏற்ற ஊதியமோ, உயர்வோ கிடைத்திருக்காது. மாடு மாதிரி உழைத்தாலும், அதற்கான பலன் கடுகளவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இனிவரும் காலகட்டங்களில் நீங்கள் லேசாக வேலை செய்தாலே போதும். அதில் நிறைய லாபம் கிடைக்கும்.

சின்ன சின்ன வேலையை செய்துவிட்டு பெரிய பாராட்டை தட்டிக் கொண்டு செல்ல போகிறீர்கள். இதுவரை வேலையே இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகின்றது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய அடுத்த நான்கு மாதமும் வாழ்க்கை ஏறுமுகத்தில் அமையும். புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையலாம். இதுநாள் வரை பதவி உயர்வே இல்லாமல், சம்பள உயர்வே இல்லாமல், ஒரே வேலையில் இருந்து கஷ்டப்பட்டவர்களுக்கு இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

குடும்ப பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை, எல்லாம் சரியாகும். நீண்ட நாள் பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. நிறைய புது முயற்சிகளை எடுங்கள். இந்த நான்கு மாதங்களும் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போவது.

இதையும் படிக்கலாமே: பரீட்சையில் வெற்றி பெற பரிகாரம்

மேலே சொன்ன இந்த ஜோதிடம் சார்ந்த தகவல்கள் பொதுப்படையானவை. இதைத் தாண்டி அவரவர் பிறந்த ஜாதகத்தின் மூலம் சில மாற்றங்கள் வாழ்வில் ஏற்படலாம் என்ற தகவலையும் இந்த இடத்தில் பதிவு செய்து ஜோதிடம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -