
பெண் தெய்வங்களில் மிகவும் உக்கிரமான தெய்வமாக கருதக்கூடிய ஒரு தெய்வம் என்றால் அது காளியம்மன் தான். பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்வதுதான் ஆடி மாதம். அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. பொதுவாகவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஒரு அற்புத நாளாகவே கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உக்கிர தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாகவும் ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. அதுவும் ஆடி மாதத்தில் வரும் பொழுது இதற்கு கூடுதல் சிறப்பு உண்டாகும். இந்த ஆடி மாதத்தில் உக்கிர தெய்வமாக இருக்கக்கூடிய காளியம்மனை எப்படி வழிபட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவர் எந்த செயலை செய்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறார், எந்தவித சுப காரியங்களும் நடைபெறவில்லை தடைகளும் தடங்கல்களும் வந்து கொண்டே இருக்கின்றன, எந்த முயற்சியும் வெற்றி அடையவில்லை என்று புலம்பினால் அவருக்கு எதிர்மறை ஆற்றலாலும் தீய சக்திகளாலும் பாதிப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்டவர் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று காளியம்மனை இப்படி எளிமையான முறையில் வழிபட்டால் போதும். அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகுவதோடு நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் திகழ்வாள்.
இந்த வழிபாட்டை ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று ஜூலை மாதம் 20ஆம் தேதி இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மந்திரத்திற்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அசைவம் சாப்பிட்டிருந்தாலும் செய்யலாம். தீட்டு காலமாக இருந்தாலும் செய்யலாம். வீட்டில் இல்லை வெளியே இருக்கிறோம் என்றாலும் செய்யலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது காளியம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும். மேலும் புதிதாக எந்த வித தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றலும் நம்மை அணுகாத வண்ணம் காளியம்மன் நம்மை காப்பாற்றுவாள் என்றே கூறலாம்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக காளியம்மனை முழுமனதோடு நினைத்துக் கொண்டு நமக்கு எதுவெல்லாம் கஷ்டம் கொடுத்ததோ, எந்த தீவினைகள் இருக்கிறதோ, எந்த எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் விலக வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் இந்த காளியம்மன் மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடம் அதிகபட்சம் 20 நிமிடம் கூற வேண்டும். திரும்பவும் காளி அம்மனை மனதார நினைத்து அவளுக்கு நன்றி தெரிவித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை பூஜை அறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அமைதியான இடத்தில் அமர்ந்து காளியம்மனை மனதார நினைத்து கூறினால் போதும்.
“ஓம் க்லீம் காளிகாயை நமஹ”
இதையும் படிக்கலாமே: காரிய சித்தி தரும் வாராஹி மந்திரம்
சக்தி வாய்ந்த இந்த காளியம்மன் வழிபாட்டை ஒவ்வொரு ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது எப்பேற்பட்ட எதிர்மறை ஆற்றலும் தீய சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.