- Advertisement -
குரு பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடம் : குரு பகவான் அதிசார பெயர்ச்சி பலன்கள் 2019

மனிதர்கள் அனைவருக்கும் நற்பலன்களை அதிகம் தரும் முழுமையான சுப கிரகமாக குரு பகவான் இருக்கிறார். அப்படியான குரு பகவான் கோச்சார ரீதியாக மார்ச் மாதம் 29 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வரை தற்போது தான் இருக்கின்ற விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

மேஷ ராசியினருக்கு 9 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசார பெயர்ச்சியாவதால் கடன்கள் அனைத்தும் கட்டி முடிகின்ற நிலை உண்டாகும். திருமண முயற்சியால் அனைத்தும் வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு 8 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசார பெயர்ச்சியாவதால் உஷ்ணம் சம்பந்தமான நோய்களால் அவதியுறும் நிலை உருவாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கணவன் – மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்ட பிறகே அது வெற்றியடையும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே சிறந்த வெற்றிகளை பெற முடியும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு 7 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், பணியிட மாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளின் சிறந்த செயல்பாடுகளால் லாபங்கள் பெருகும். பெரிய மனிதர்களுடனான தொடர்புகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்லும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

கடக ராசியினருக்கு 6 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறகே வெற்றி உண்டாகும். கடன்கள் ஏற்பட்டாலும் அதை கூடிய விரைவில் கட்டி முடிகின்ற யோகம் உண்டாகும்.

சிம்மம்:

சிம்மம் ராசியினருக்கு 5 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உங்கள் தொழில், வியாபாரங்களில் இருந்த கடுமையான போட்டி நிலை நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வர வேண்டிய கடன் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள், நகைகள் வாங்கும் அமைப்பு ஏற்படும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் கல்வி, கலைகளில் சாதனைகள் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

கன்னி:

கன்னி ராசியினருக்கு 4 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் எதிலும் ஏற்ற இறக்கமான பலன்களே இருக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் பிறருடன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடல்நலத்தில் கவனம் கொள்வது நல்லது. தொலைதூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமைவதில் சற்று தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் கிடைக்கவில்லையென்றாலும் நஷ்டம் உண்டாகாது.

துலாம்:

துலாம் ராசியினருக்கு 3 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் எடுக்கின்ற முயற்சிகளில் விடாமல் போராடி வெற்றி பெறுவீர்கள். திடீர் தனவரவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல் நலம் சற்று பாதிக்கப்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். உத்தியோகிஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியினருக்கு 2 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றி பெரும். உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய கடன் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனங்களை இயக்கும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசி அதன் ராசியிலேயே குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் பிறருடன் எந்த ஒரு விடயத்திலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகள் சம்பந்தமான விவகாரங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்ப தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:

மகரம் ராசியினருக்கு 12 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உடல் மனநலம் சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபங்கள் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாறுதல்கள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கல்வியில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும்.

கும்பம்:

கும்பம் ராசியினருக்கு 11 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் வீட்டில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். வேலைபளு குறையும். பண முதலீடு தொடர்பான விடயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றியடைந்து மிகுந்த லாபங்களை கொடுக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்:

மீனம் ராசியினருக்கு 10 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் எப்படியாவது அடைத்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
சனி திசை பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athisara guru peyarchi 2019 in Tamil. It is also called as Guru athisaram in Tamil or Guru bhagavan in Tamil or Guru vakram 2019 in Tamil or Guru athisara palan in Tamil.

- Advertisement -