ஜோதிடம் : சனி திசை பாதிப்பில் இருந்து தப்பிக்க மிக எளிய பரிகாரங்கள்

sani-bagawan
- Advertisement -

சனி திசை உள்ள ஒருவருக்கு சந்தேகம் என்ற தானாக ஒட்டிக்கொள்ளும். இந்த சனி திசையினால் ஏகப்பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடும். சனி திசை இருக்கும் ஒரு நபருக்கு நேரடி சண்டைகள் வராது. அவரை சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் மூலம் தேவையில்லாத சண்டைகள் ஏற்பட்டு பெரிய பிரச்சனையாகி நிம்மதி பாதிக்கும். இவ்வாறு சனி திசை நடக்கும் ஒருவர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ

Sani bagavaan

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் பழக்கத்தினை கைவிட்டு எந்த விடயத்தினையும் யோசித்து செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் அமைதியாக அணுகவேண்டும். மேலும் மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவதன் மூலம் சனி திசை நம்மீது விழாமல் இருக்கும் இதுபோன்ற பல விடயங்களை கீழே ஒரு தொகுப்பாக இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

- Advertisement -

பிரதோஷ பூஜைகளில் கலந்துகொள்ள வேண்டும், சனிக்கிழமை எள் எண்ணை ஏற்ற வேண்டும், ஏழை மாணவர்களுக்கு உதவுதல், சனி பிரகார பூஜைகளில் கலந்து கொள்ளுதல், கோமாதா பூஜை செய்தல், அன்னதானம் செய்தல், சித்தர் பீடங்களுக்கு சென்று வணங்குதல், வன்னி மரங்களை சுற்றி வருதல், தினமும் ராம நாமம் ஜெபித்தால் மற்றும் சிவ வழிபாட்டில் வில்வ இலை வைத்து வணங்குதல் போன்ற பரிகாரங்களை செய்யலா.

Hanuman and Sani

மேலும் சனி திசை முழுவதும் நீங்க 12 இடத்தில் இருக்கும் சனி திசையின் பார்வையில் இருப்பவர்கள் செய்யவேண்டியவை :

- Advertisement -

இரண்டாம் இடத்தில் சனி இருப்பவர்கள் : நெற்றியில் எள் எண்ணெய் தேய்க்கக்கூடாது.
3ஆம் இடத்தில் சனி : வீட்டு வாசலில் மூன்று ஆணி அடித்து வைத்திருத்தல் நல்லது.
4ஆம் இடத்தில் சனி : கொள்ளு தானம் செய்தல் சிறந்தது.
5ஆம் இடத்தில் சனி : வீட்டின் மேற்கு பகுதி அறையில் தங்கம், வெள்ளி பொருட்களை வைக்கலாம்.
6ஆம் இடத்தில் சனி : 40 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் வீடு கட்டுதல் நல்லதல்ல.
7ஆம் இடத்தில் சனி : கருப்பு நிற பசுவுக்கு புல் தருதல் நல்லது.

Sani Bagavan
8ஆம் இடத்தில் சனி : தரையில் அமராமல் நாற்காலியில் அமர்ந்து ஒரு ஸ்பூன் பால் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
9ஆம் இடத்தில் சனி : வீட்டின் மொட்டை மாடியில் எந்த செடிகளையும் வளர்க்கக்கூடாது.
10ஆம் இடத்தில் சனி : பார்வையற்றவர்களுக்கு தானம் செய்தல், உதவி செய்தல் நல்லது.
11ஆம் இடத்தில் சனி : வீட்டை பூட்டி விட்டு வெளியே நீண்ட நேரம் சென்றால் வீட்டு வாசலில் ஓர் குடத்தில் தண்ணீர் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
12ஆம் இடத்தில் சனி : வீட்டின் இருட்டு அறையில் 12 பாதாம் பருப்புகளை ஒரு துணியில் வைத்து கட்டி வைத்தால் நல்லது.

இதையும் படிக்கலாமே:
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani thisai pariharam in Tamil or Sani dasa pariharam in Tamil is here. We can also say it as Sani thisai enna seiyum in Tamil.

- Advertisement -