
இந்த வத்தல், வடகம் போன்றவற்றை செய்வதற்கு அனைவருமே சிரமப்படுவார்கள். ஏனென்றால் அதை காய்ச்சி, ஆற வைத்து அதன் பிறகு காய வைத்து என அதன் வேலைகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலும் இவையெல்லாம் வீட்டில் செய்வதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுலபமான அதே நேரத்தில் ஒரு நல்ல ஆரோக்கியமான பொருளை வைத்து சுவையான இந்த ஒரு வத்தலை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த வத்தல் செய்வதற்கு அடுப்பை பற்ற வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் இதை அப்படியே அரைத்து பவுடராக்கி தான் செய்யப் போகிறோம். இதை மிக சுலபமாக செய்து விடலாம். சமையல் செய்து பழக்கம் இல்லாதவர்கள் கூட எளிமையாக செய்யும் வகையில் தான் இந்த வத்தல் இருக்கும்.
இந்த வத்தல் செய்ய ஒரு டம்ளர் கெட்டியான அவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து எடுத்த இந்த பவுடரை கொஞ்சம் கூட கொர கொரப்பு இல்லாத அளவிற்கு சலித்து பைன் பவுடராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மூன்று பச்சை மிளகாய் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே சலித்து வைத்த அவல் பவுடரில் இப்போது அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவை ஒரு மூடி போட்டு பாக்ஸில் போட்டு மூடி விடுங்கள். இதை அரைமணி நேரம் வரை ஊற விட வேண்டும்.
அதன் பிறகு முறுக்கு அச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு குழல் மட்டும் இருக்கும் தட்டை வைத்து விடுங்கள். அதில் ஊற வைத்த அவல் மாவை சேர்த்து முறுக்கு பிழிவது போல் சின்ன சின்ன வட்டமாக ஒரு அகலமான தட்டில் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை இரண்டு நாள் நல்ல வெயில் காய வைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான அவல் வத்தல் தயார்.
இதை ஒரு காற்று போகாத டப்பாவில் போட்டு எடுத்து வைத்து விடுங்கள். ஒரு வருடமானால் கூட கெட்டுப் போகாமல் வைத்து பயன்படுத்தலாம். நமக்கு தேவைப்படும் போது கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட லாம் மிகவும் சுவையாக இருக்கும். அதே நேரத்தில் அவல் உடம்பிற்கு மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே: மாவடு ஊறுகாய் போடுவது இவ்வளவு ஈஸியா? ஐயர் வீட்டு, மாவடுவை, நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம் வாங்க.
இந்த அவல் வத்தல் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் உங்கள் வீட்டில் இது போல செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ட்ரை பண்ணி பாருங்க.