மாவடு ஊறுகாய் போடுவது இவ்வளவு ஈஸியா? ஐயர் வீட்டு, மாவடுவை, நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம் வாங்க.

maavadu
- Advertisement -

பெரும்பாலும் அய்யர் வீடுகளில் தான் தயிர் சாதம், மாவடுவை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய வீட்டு மாவடு என்றாலே அது ஒரு தனி சுவைதான். ஆனால் அந்த மாவடு செய்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் அல்ல. சரியான அளவுகளில் உப்பு காரம், மாங்காய் எடுத்தால் சூப்பரான மாவடுவை யார் வீட்டில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வடுமாங்காய் நமக்கு மார்க்கெட்டில் கிடைக்கும். அப்போது உங்களுடைய வீட்டிலும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்

வடு மாங்காய் 1 கிலோ, வர மிளகாய் 25, கல்லுப்பு 200 கிராம், கருகு 1 பெரிய டேபிள்ஸ்பூன், விளக்கெண்ணெய் 2 பெரிய டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன். கல் உப்பை அப்படியே மாங்காயில் கொட்டினால் கரைவதற்கு நேரம் எடுக்கும். மிக்ஸியில் போட்டு அதை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செய்முறை

வடு மாங்காயை முதலில் தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி தண்ணீரையெல்லாம் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை துணியின் மேல், கழுவிய வடுமாங்காயை போட்டு, ஃபேன் காற்றில் தண்ணீர் இல்லாமல் காய வைத்து, துண்டில் நன்றாக துடைத்து விட வேண்டும். மாங்காயில் காம்பு பகுதியை லேசாக வெட்டி, அதில் வரும் பாலை துண்டால் துடைத்து எடுத்து விடுங்கள். மாங்காயில் ஒரு சொட்டு தண்ணீர் இருந்தால் கூட இருக்கக் கூடாது. ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகும்.

கழுவிய இந்த மாங்காயை அகலமான ஒரு பிளாஸ்டிக் பௌலிலோ அல்லது கண்ணாடி பௌலிலோ கொட்டி விளக்கெண்ணெய் ஊற்றி, தூள் செய்து வைத்திருக்கும் உப்பை போட்டு, நன்றாக குலுக்கி ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 3 நாட்கள் இந்த மாங்காய் உப்பில் ஊற வேண்டும். தினமும் அந்த டப்பாவை எடுத்து குலுக்கி வையுங்கள். மூன்று நாட்கள் கழித்து மாங்காய் நன்றாக தண்ணீர் விட்டு வரும்.

- Advertisement -

அடுத்து ஒரு மண் சட்டி அல்லது கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து, அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த சூடாக இருக்கும் கடாயில் வரமிளகாயையும், கடுகையும் போட்டு லேசாக வறுத்து நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை அப்படியே 3 நாட்கள் உப்பில் ஊறின மாங்காயில் கொட்டி, மஞ்சள் பொடியை போட்டு மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குக்கரில் தண்ணீர் குறைவாக வைத்து அடிக்கடி தீய விடும் பழக்கம் உங்களுக்கு இருக்குதா? இனிமே குக்கர் அடி பிடித்து, கருகிப் போனாலும் கூட உள்ளே இருக்கும் பொருளில், கருகிய வாடை வீசவே வீசாது. இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா.

எல்லா மசாலா பொருட்களும் சேர்ந்த பின்பு மாவடு 1 வாரம் ஊற வேண்டும். உங்களால் இதை வெயிலில் வைக்க முடிந்தால் வைத்து எடுக்கலாம். இல்லையென்றால் பரவாயில்லை. அப்படியே வீட்டுக்குள்ளேயே ஊறட்டும். நன்றாக ஊறிய மாங்காய் சுருங்கி வந்த பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் மாற்றி ஸ்டோர் செய்ய வேண்டும். சில்வர் பாத்திரத்தில் மாங்காயை ஸ்டோர் செய்யக்கூடாது. இதற்கு பயன்படுத்தும் ஸ்பூன் கூட மரக்கரண்டி அல்லது பீங்கான் கரண்டியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. என்னங்க உங்க வீட்லயும் இனி மாவடு தயாராகும் இல்லையா. ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -