
நாளை ஆவணி மாதம் வரக்கூடிய அமாவாசையில் பித்ரு வழிபாடு செய்வதும், இந்த பொருட்களை வாங்குவதும் பேரதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. சர்வ அமாவாசை தினத்தில் வெள்ளிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் உண்டாகக்கூடிய அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
பொதுவாக அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்வதும், காகத்திற்கு சாதம் வைப்பதும், அன்னதானம் செய்வதும் விசேஷமானது. அமாவாசையில் பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும். இந்த நாட்களில் இரும்பு சார்ந்த பொருட்கள், எண்ணெய், மிளகாய் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது என்பார்கள். இந்த நாளில் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். பூஜை பொருட்களை வாங்குவதற்கு உகந்த நாளாக இந்நாள் கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமையுடன் வந்திருக்கக்கூடிய ஆவணி அமாவாசையில் துளசி செடியை வீட்டில் வாங்கி வளர்த்து வர லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். துளசி செடி இல்லாதவர்கள் இல்லத்தில் புதிதாக துளசி செடி வாங்கி வளர்க்கலாம் அல்லது அதன் விதைகளை ஊன்றி வைத்து வளர்க்கலாம். அமாவாசையில் பசுக்களுக்கு வெல்லம், பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றை தானம் கொடுப்பது ரொம்பவும் நல்லது. அகத்திக்கீரை தானம் செய்வது பித்ரு தோஷங்களை போக்கும் எளிய பரிகாரமாக இருந்து வருகிறது.
அமாவாசையில் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். அமைதியாக அதிகம் பேசாமல் அன்றைய நாளில் மௌன விரதம் இருப்பது மேலானது. அமாவாசை தினத்தில் மிளகு, மிளகாய் போன்ற காரமான உணவுகளை தவிர்த்து சமைக்க வேண்டும். அமாவாசையில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வாங்கி பித்ருக்களுக்கு பூஜை செய்வது முறையாகும். அந்த நாளில் தேன், வெல்லம், பனங்கருப்பட்டி போன்ற பொருட்களை வாங்குவது ரொம்பவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது.
இந்த பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூஜை அறையில் இந்த பொருட்களை அமாவாசை தினத்தில் வாங்கி வைத்து பூஜை செய்த பின்னர், நீங்கள் தினமும் பயன்படுத்தி வர ஆரோக்கியம் சீராகும். வெள்ளி அல்லது பித்தளை பொருட்கள் வாங்குவதற்கு உகந்தது அம்மாவாசை திதி ஆகும். இந்நாளில் சிறிய பித்தளை பாத்திரத்தை வாங்குவதன் மூலமும் பேரதிர்ஷ்டம் வருமாம். புதிய விளக்கு வாங்கி வைப்பதும், இந்த நாளில் அதிர்ஷ்டம் மிக்கதாக கருதப்படுகிறது. அமாவாசையில் அரிசி, பருப்பு, கோதுமை தானியங்கள் வாங்குவது அதிர்ஷ்டமிக்கதாக சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் தானம் செய்வது விசேஷமானது.
இதையும் படிக்கலாமே:
நினைத்தது நடக்க அஸ்வந்த நாராயணர் வழிபாடு
அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவற்றை தானம் செய்வதன் மூலம் பித்ருகளுடைய ஆசீர்வாதத்தை பெறலாம். எள்ளு சாதம் செய்து காகத்திற்கு படைப்பது பித்ரு தோஷத்தை போக்கும். எள்ளு, வாழைக்காய் போன்றவற்றை வீட்டில் சமைத்து சாப்பிடுவது அன்றைய நாளில் ரொம்பவும் நன்மை தரக்கூடியது. பூஜை பொருட்களாக குங்குமம், சந்தனம், ஜவ்வாது போன்ற பொருட்களையும் இந்த நாளில் வாங்கி வைக்கலாம். அமாவாசையில் இப்பொருட்களை வாங்கி பூஜை செய்பவர்களுக்கு, மிகுந்த நன்மைகள் உண்டாகும். கருப்பு நிற ஆடைகளை அன்றைய நாளில் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத இடங்களுக்கு பயணம் செய்வதும், தொலைதூர பயணங்கள் திடீரென மேற்கொள்வதும் வேண்டாம்.